இந்த போர் இஸ்ரேலுக்கு வாழ்வா.. சாவா? - ஹிஸ்புல்லாவுக்கு பெஞ்சமின் நெதன்யாகு கடும் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

டெல் அவிவ்: லெபனானில் இருந்து இஸ்ரேலை தாக்கிவரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், இஸ்ரேலுடன் இருமுனை போரை தொடங்க ஹிஸ்புல்லா முயற்சிக்கிறது. இந்த முயற்சி லெபனானுக்கு நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பேரழிவை சந்திக்கும் வகையில் இஸ்ரேலின் பதிலடி இருக்கும். இந்த போர் இஸ்ரேலுக்கு வாழ்வா? சாவா? போன்றது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி நேரில் சந்தித்தார். அப்போது இஸ்ரேல் மற்றும் அந்நாட்டு மக்களுக்கான தனது நாட்டின் ஆதரவை மெலோனி வெளிப்படுத்தினார். இதேபோல், சைப்ரஸ் நாட்டின் அதிபர் கிறிஸ்டோதவுலைட்சும் நெதன்யாகுவை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

காசா எல்லையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலிகளை ராக்கெட்டுகளை வீசியும், புல்டோசர்கள் கொண்டு தகர்த்து ஹமாஸ் தீவிரவாத குழுவினர் இஸ்ரேலுக்குள் நுழைந்த நிலையில், காசா எல்லையில் ஹமாஸ் தீவிரவாதக் குழுவால் தகர்க்கபப்ட்ட இரும்பு வேலிகளை சீரமைக்கும் பணியில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. இரும்பு வேலிகள் சீரமைக்கப்பட்டு காசா எல்லைப்பகுதியில் பாதுகாப்பை இஸ்ரேல் பலப்படுத்தியுள்ளது.

இந்தியா மனிதாபிமான உதவி: உயிர் வாழத் தேவையான மனிதாபிமான உதவிப் பொருள்கள் அடங்கிய விமானத்தை இந்தியா இன்று அனுப்பியுள்ளது என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE