இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தலைவர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

காசா: காசாவில் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய விமானம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் பீரங்கி படை துணைத் தலைவரான முஹம்மது கதாமாஷை கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) அறிவித்துள்ளது.

ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் மத்திய முகாம்கள் படைப்பிரிவில் பீரங்கி படைப்பிரிவுக்கு தலைமை வகித்தவர் இந்த முஹம்மது கதாமாஷ். காசா பகுதியில் இஸ்ரேலுக்கு எதிராக நடத்தப்பட்ட பீரங்கி தாக்குதல் மற்றும் திட்டமிடப்பட்ட தீ விபத்துகளுக்கு இவரே முழு காரணம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறியுள்ளது.

இதேபோல், ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய விமானம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் செயல்பாட்டாளர் ஒருவர் காசா எல்லையின் வடக்குப் பகுதியில் கொல்லப்பட்டார் என்றும், அதேநேரம், ஆயுத தயாரிப்பு தளம் மற்றும் ராணுவ தலைமையகம் தாக்கப்பட்டது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

29 ஐநா ஊழியர்கள் உயிரிழப்பு: ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் தொடங்கியதில் இருந்து இதுவரை காசாவில் உதவிகள் செய்துவந்த ஐக்கிய நாடுகள் சபையின் ஊழியர்கள் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த 29 பேரில் ஐநா பாலஸ்தீனிய அகதிகள் அமைப்பின் ஆசிரியர்கள்தான் பாதிக்கும் அதிகம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE