ஆப்கனில் ஆம்புலன்ஸ் வெடிகுண்டு தாக்குதலில் 95 பேர் பரிதாப பலி: படுகாயமடைந்த 150 பேர் மருத்துவமனையில் அனுமதி

By ராய்ட்டர்ஸ்

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டு நிரப்பிய ஆம்புலன்ஸ் வாகனத்தை மோதி தாக்குதல் நடத்தியதில் 95 பேர் உடல் சிதறி பலியாயினர். மேலும் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தலைநகர் காபுலில் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் அரசு அலுவலகக் கட்டிடங்கள் அமைந்துள்ள பகுதிக்கு அருகே ஒரு காவல் சோதனைச் சாவடி உள்ளது. நேற்று இந்த சாவடி அருகே வந்த ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் திடீரென வெடித்துச் சிதறியது. இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “இந்தத் தாக்குதலில் 95 பேர் பலியாயினர். மேலும் காயமடைந்த 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆம்புலன்ஸ் வாகனத்தில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை அதை ஓட்டி வந்த தற்கொலைப் படை தீவிரவாதி வெடிக்கச் செய்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றார்.

இந்தத் தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. காபுல் நகரில் உள்ள வெளிநாட்டு ஒட்டல் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த தீவிரவாத தாக்குதலில் 22 பேர் பலியாயினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

20 mins ago

உலகம்

6 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்