வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணி டாக்டருக்கு 175 ஆண்டு சிறை

By ஏஎஃப்பி

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணி யின் முன்னாள் டாக்டர் லாரி நாசருக்கு 175 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிக்ஸிகன் மாகாணம், பார்மிங்டன் ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் லாரி நாசர் (54). மருத்துவரான அவர் 1986-ல் ஜிம்னாஸ்டிக் தேசிய அணியின் மருத்துவ அதிகாரியாக பணியில் சேர்ந்தார். 10 ஆண்டு காலத்தில் மூத்த மருத்துவ அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.

சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை என்ற பெயரில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளை டாக்டர் லாரி நாசர் பாலியல்ரீதியாக துன்புறுத்தியுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டில் டாக்டர் லாரியின் பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. இதுதொடர்பாக எப்பிஐ போலீஸார் விசாரித்தனர். மிக்ஸிகன் மாகாணம் இங்ஹாம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. நீதிபதி ரோஸ்மேரி அகுலினா வழக்கை விசாரித்தார்.

விசாரணையின்போது நூற்றுக்கணக்கான வீராங்கனைகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட 156 முன்னாள் வீராங்கனைகள் அவருக்கு எதிராக சாட்சியம் அளித்தனர். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஷான் ஜான்சன் உள்ளிட்டோரும் லாரி நாசருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தனர்.

இந்த வழக்கில் நீதிபதி ரோஸ்மேரி நேற்றுமுன்தினம் தீர்ப்பு வழங்கினார். அப்போது லாரி நாசருக்கு 175 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். குழந்தைகள் ஆபாச வீடியோ காரணமாக அவருக்கு ஏற்கெனவே 60 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தனது ஆயுள் காலம் முழுவதையும் லாரி நாசர் சிறையிலேயே கழிக்க வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

4 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

மேலும்