டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் வடக்கு காசாபகுதியில் இஸ்ரேலின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்த தயாராகி வருகின்றன. இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் மேலும்ஒரு ஹமாஸ் கமாண்டர் உயிரிழந்தார்.
கடந்த 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் தெற்குபகுதியில் தரை, கடல், வான் வழியாக நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,300 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 2,300 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்க ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே நேற்று 9-வது நாளாக போர் நீடித்தது.
ஹமாஸ் தீவிரவாதிகளின் நுக்பா படையின் தெற்கு பகுதி கமாண்டர் பிலால் அல் குவாத்ரா, காசாவின் தெற்கு பகுதியான கான் யூனிஸ் பகுதியில் இருப்பதாக இஸ்ரேல் ராணுவத்துக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை குறிவைத்து இஸ்ரேல் விமானப் படையின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் பிலால் அல் குவாத்ரா உட்பட ஏராளமான ஹமாஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, ‘‘கடந்த 7-ம் தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிலால் அல் குவாத்ரா மூளையாக செயல்பட்டுள்ளார். இஸ்ரேலின் 2 நகரங்கள் மீதான தாக்குதல் அவரது தலைமையின்கீழ் நடந்துள்ளது. தற்போது எங்கள் தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார். அவர் உட்பட இதுவரை 3 ஹமாஸ் கமாண்டர்கள் உயிரிழந்துள்ளனர்’’ என்று தெரிவித்தன.
» “இந்த விருது பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கன் மக்களுக்கானது” - ஆட்ட நாயகன் முஜீப்!
» அடுத்த 15 ஆண்டுகளுக்கு AI சார்ந்த துறைகளில் அதிக வாய்ப்பு: அண்ணா பல்கலை துணைவேந்தர் பேச்சு
காசாவின் வடக்கு பகுதியில் தரை வழியாக தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் 11 லட்சம்மக்கள் பாதுகாப்பான தெற்கு காசா பகுதிக்கு செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக மக்களுக்கு முதலில் 24 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் மேலும்6 மணி நேரம் அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், நேற்று மீண்டும்3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது.
வழிகளை மூடிய தீவிரவாதிகள்: ஆனால், மக்கள் செல்லும்வழிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் மூடிவிட்டதால், லட்சக்கணக்கான மக்கள் வடக்கு காசா பகுதியில் சிக்கி தவிக்கின்றனர்.
இதற்கிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் டெல் அவிவ் நகரில் நேற்று அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நெதன்யாகு பேசும்போது, ‘‘இஸ்ரேல் மக்களை அழித்துவிடலாம் என்று ஹமாஸ் கனவு காண்கிறது. அதற்கு முன்பாக, ஹமாஸ் அமைப்பை நாம் முழுமையாக அழித்துவிடுவோம். இஸ்ரேலின் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் ஓரணியாக செயல்பட வேண்டும்’’ என்றார். வடக்கு காசா பகுதியில் தரைவழி தாக்குதல் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் கூறும்போது, ‘‘ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து அழிக்கப்பட்டு வருகின்றனர். விரைவில் ஹமாஸ் அமைப்பு முழுமையாக அழிக்கப்படும்’’ என்றார்.
பாலஸ்தீனத்தின் வடக்கு காசா பகுதியில் இஸ்ரேலின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்ததயாராகி வருகின்றன. இதற்காக காசா முனை எல்லை பகுதியில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் ராணுவ பீரங்கிகள் தயார் நிலையில் உள்ளன. சுமார் 10,000 வீரர்கள் ஏற்கெனவே காசா எல்லை பகுதிக்குள் நுழைந்துவிட்டனர். ராணுவ தலைமையிடம் இருந்து உத்தரவு கிடைத்தவுடன் தாக்குதல் தொடங்கும். இஸ்ரேல் ராணுவம், விமானப் படை, கடற்படை தயார் நிலையில் உள்ளன. வடக்கு காசாபகுதியில் ஒரே நேரத்தில் இஸ்ரேலின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் மக்கள் வெளியேற்றம்: காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடத்தும்போது, ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவுகணை குண்டு தாக்குதலை தீவிரப்படுத்தக்கூடும் என்றுதெரிகிறது. இதனால், காசாவை ஒட்டிய இஸ்ரேலின் தெற்கு பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை குறிவைத்தும் ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவுகணை குண்டுகளை வீசி வருகின்றனர். இதனால், இஸ்ரேல் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
15 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago