டெல் அவிவ்: ஹமாஸ் பயங்கரவாதிகளுடனான சண்டை தொடரும் என்று தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன பயங்கரவாதிகள் அனைவரும் உயிரற்ற மனிதர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் குழு சனிக்கிழமை இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முதல் முறையாக ஹமாஸ்களை அழிக்கும் இஸ்ரேலின் நோக்கத்தினை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
"ஹமாஸ்கள் டேஷ் (இஸ்லாமிய அரசு குழு) உலகம் டேஷ்களை அழித்ததைப் போல நாங்கள் அவர்களை நசுக்கி அழித்தொழிப்போம்" என முதல்முறையாக அவரது வார் கேபினட்டுடன் அமர்ந்து வழங்கிய அறிக்கையொன்றில் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சர் யாவ் காலன்ட் கூறுகையில், "நாங்கள் ஹமாஸ்களை பூமியில் இருந்தே அழித்தொழிப்போம்" என்று தெரிவித்தார்.
இதனிடையே இஸ்ரேலில் தற்போது நிலவி வரும் நெருக்கடியான காலத்தில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் வேறுபாடுகளை தற்காலிகமாக கைவிட்டுவிட்டு எதிர்க்கட்சி தலைவர் பென்னி கன்ட்ஸ் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் யாவ் காலன்ட் ஆகியோருடன் இணைந்து அவசர நிலை அரசை உருவாக்க சம்மதித்துள்ளனர். இவர்கள் போர்க்கால அமைச்சரவையாக செயல்படுவர்.
» ஆபரேஷன் அஜய் | இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்கும் திட்டம்
» இஸ்ரேல் - ஹமாஸ் போர் | ‘ஒற்றுமை அரசு’ அமைத்த நெதன்யாகு; கவலைக்குரிய காசா நிலை!
முன்னதாக, காசாவிலிருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி ராக்கெட் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தினர். அதன் பின் இஸ்ரேலின் தென் பகுதியில் ஊடுருவிய ஹமாஸ் பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை சுட்டுக் கொன்று பலரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேலிய விமானப்படை காசா நகர் மீது குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டது. இந்தப் போரில் இஸ்ரேல் தரப்பில் உயிரிழப்பு 1,200 ஆகவும், காசா பகுதியில் உயிரிழப்பு 1,100 ஆகவும் அதிகரித்துள்ளது. எனினும், இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் 1,500 பேரை சுட்டுக் கொன்றுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. காசா பகுதியில் இஸ்ரேல் விமனப்படை நேற்று முன்தினம் இரவு நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல்-பாலஸ்தீன போரில் இதுவரை உயிரிழப்பு 3,300-ஐ கடந்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago