புதுடெல்லி: பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப் படை தளத்தில் 2016 ஜனவரியில் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் 4 தீவிரவாதிகள் ஊடுருவி திடீர் தாக்குதல் நடத்தினர். பின்னர் நால்வரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் 7 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இந்த தாக்குதலை ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் சியால் கோட் கமாண்டரான ஷாகித் லத்தீப்உள்ளிட்ட இருவர் கையாண்டது, வழிநடத்தியது தெரியவந்தது. இந்நிலையில் சியால்கோட் நகரில்உள்ள மசூதி ஒன்றில் ஷாகித் லத்தீப்அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். ஷாகித் லத்தீப் கடந்த 1996-ல் ஜம்முவில் போதைப் பொருள் மற்றும் தீவிரவாத வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கடந்த 2010-ம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார்.
பாகிஸ்தான் உடனான உறவைசீரமைக்கும் முயற்சியாக அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு லத்தீப் மற்றும் 24 தீவிரவாதிகளை விடுவித்தது.
1999-ம் ஆண்டு டிசம்பரில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம்கடத்தப்பட்டபோது, 154 பயணிகளை மீட்பதற்காக ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மவுலானா மசூத் அசார் மற்றும் 2 தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டனர்.
» ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியா எட்டிய மைல்கல்!
» திருவள்ளூர் | போலீஸ் என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை
அப்போது ஷாகித் லத்தீப் உள்ளிட்ட 32 பேரையும் தீவிரவாதிகள் கோரினர். ஆனால் இவர்களை விடுவிக்க அப்போதைய வாஜ்பாய்அரசு மறுத்துவிட்டது.
முக்கிய செய்திகள்
உலகம்
10 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago