சிரியாவில் தாக்குதல் நடத்துவதை துருக்கி நிறுத்த வேண்டும்: அமெரிக்கா

By ராய்ட்டர்ஸ்

சிரியாவில் நடத்தும் தாக்குதலை துருக்கி ராணுவம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துள்ளது.

சிரியாவின் வடக்குப் பகுதி குர்து இன மக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. மக்கள் பாதுகாப்பு குழுக்கள் (ஒய்.பி.ஜி) என்ற பெயரில் செயல்படும் குர்து ராணுவத்துக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.

துருக்கி நாட்டின் கிழக்கு, தென்கிழக்கு பகுதிகளில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அங்கு செயல்படும் தீவிரவாத குழுக்களுக்கு சிரியாவின் ஒய்.பி.ஜி. ராணுவம் ஆதரவு அளிப்பதாக துருக்கி அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.

குர்து படையினர் துருக்கியில் அவ்வப்போது குண்டு வெடிப்பு சம்பவங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சிரியாவின் வடக்குப் பகுதி மீது துருக்கி ராணுவம் கடந்த வாரம் தாக்குதல் நடத்தியது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கு அமெரிக்க தரப்பில் துருக்கிக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. துருக்கி தொடர்ந்து குர்து பகுதிகளில் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் துருக்கி அதிபர் எர்டோகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெலியிட்டுள்ளது.

அதில், "சிரியாவில் துருக்கி நடத்தும் தவறான செயல் கவலை அழிக்கிறது. சிரியாவில் தாக்குதல் நடத்துவதை நிறுத்துங்கள். சிரிய மக்கள் கொல்லப்படுவதை கருத்தில் கொண்டு துருக்கி ராணுவம் சிரியாவில் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்