டெல் அவிவ்: இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண்ணின் உடலை ஹமாஸ் தீவிரவாதிகள் டிரக்கின் பின்புறத்தில் வைத்து நிர்வாண கோலத்தில் கொண்டு சென்ற வீடியோ வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
இறந்த பெண்ணின் உடலை காலால் மிதித்தபடி நிர்வாணமாக டிரக்கில் தூக்கிச் செல்லும் ஹமாஸ் தீவிரவாதிகள் அந்த உடலின் மீது எச்சிலை துப்பி அவமரியாதை செய்கின்றனர். அப்போது, இதனைக் கண்டு டிரக்கை சுற்றி நின்றவர்களும் ஆரவாரம் செய்கின்றனர். இந்த வீடியோ மனித உரிமை ஆர்வலர்களை கவலை அடைய செய்துள்ளது.
யார் அந்தப் பெண்? போரில் உயிரிழந்த பெண் ஜெர்மனியைச் சேர்ந்த ஷானி லவுக் (30) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர், இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக ஜெர்மனியில் இருந்து இஸ்ரேல் சென்றுள்ளார். நிகழ்ச்சி நடைபெற்ற இடம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதலை முதன்முதலாக தொடங்கிய எல்லைக்கு உட்பட்ட இடம் என்பதால் அவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு அந்தப் பெண் கொல்லப்பட்டுள்ளார். டிரக்கில் மகளின் உடலை கொண்டு செல்வதை வீடியோவில் பார்த்து கதறி அழுத ஷானியின் தாயார் ரிக்கார்டா, தனது மகளின் உடலை கண்டுபிடிக்க பாலஸ்தீனர்கள் உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
15 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago