டெல் அவிவ்: இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் போரிடும் நிலையில், வடக்கு பகுதியில் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கியுள்ளனர். இரு தரப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவம் கடும் பதிலடி கொடுத்து வருவதால், எல்லை பகுதிகளில் போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
இஸ்ரேலின் தென் பகுதியில் காசா எல்லையில் இருந்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் ராக்கெட் குண்டுவீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். பின்னர், காசா எல்லையின் தடுப்பு வேலிகளை குண்டு வைத்து தகர்த்து, 22 பகுதிகளின் வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்தனர்.
எல்லை பகுதியில் இருந்து சுமார் 24 கி.மீ தூரம் ஊடுருவிய அவர்கள், இஸ்ரேலில் அப்பாவி மக்கள் மீதுசரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், இஸ்ரேல் தரப்பில் 74 பாதுகாப்பு படையினர் உட்பட 600 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் மக்களை பலரை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர்.
20,000 பேர் வெளியேற்றம்: பாலஸ்தீனத்தின் காசா நகரில் 426 இடங்களில் இஸ்ரேல் விமானப் படை நடத்திய பதில் தாக்குதலில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாகின. 313 பேர் உயிரிழந்தனர். 1,800 பேர் காயம் அடைந்தனர். இஸ்ரேலின் பதிலடி தாக்குதலால், காசா எல்லை பகுதிக்கு அருகே வசிக்கும் பாலஸ்தீனர்கள் 20,000 பேர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி, தொலைதூர பகுதிகளுக்கு சென்று, ஐ.நா. பள்ளிக்கூடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
» இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல் | ஹமாஸ் அமைப்பின் பின்னணி!
» “டெஸ்ட் கிரிக்கெட் போல விளையாடுமாறு கோலி சொன்னார்” - வெற்றிக்கு பிறகு கே.எல்.ராகுல்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், ‘‘இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் முழு பலத்தையும் பயன்படுத்தி, காசா நகரில் ஹமாஸ் தீவிரவாதிகள் செயல்படும் அனைத்து இடங்களையும் அழிப்போம். இந்த போர் நீண்ட காலம்நடக்கும்’’ என்றார்.
காசா எல்லையில் ஏற்கெனவே உள்ள 31 பட்டாலியன் பாதுகாப்பு படையினருடன் இஸ்ரேல் ராணுவத்தின் 4 படைப்பிரிவுகள் பீரங்கி வாகனங்களுடன் வந்துள்ளனர். இதனால், இஸ்ரேல் ராணுவம் காசா நகருக்குள் புகுந்து தரைவழி தாக்குதல் நடத்தி ஹமாஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தும் என்று தெரிகிறது.
இதற்கிடையே, இஸ்ரேலின் தென்பகுதி நகரங்களில் புகுந்த ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. 8 இடங்களில் நடந்த சண்டையில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், பலரை பிடித்துள்ளதாகவும் இஸ்ரேல் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார். பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையிலும் ராணுவம் தீவிரமாக இறங்கியுள்ளது.
காசா எல்லையில் இருந்து ஹமாஸ் தீவிரவாதிகள் நேற்று காலையும் 100 ராக்கெட் குண்டுகளை இஸ்ரேல் மீது ஏவினர். இதில் பலவற்றை இஸ்ரேல் ராணுவத்தின் ‘அயர்ன் டோம்’ வான் பாதுகாப்பு ஏவுகணைகள், நடுவானிலேயே இடைமறித்து அழித்தன. ஆஸ்கெலான்கடற்கரை நகரில் உள்ள ஒரு மருத்துவமனை மீது ராக்கெட் குண்டுவீசப்பட்டது. அங்கு இருந்த நோயாளிகளை ராணுவத்தினர் பத்திரமாகவெளியேற்றினர். இஸ்ரேல் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இஸ்ரேலின் தென்பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் ராணுவம் போரிடும் நேரத்தில், வடக்கு பகுதியில் லெபனான் எல்லையில் இருந்து மற்றொரு எதிரியான ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும் இஸ்ரேல் ராணுவம் மீது ராக்கெட்குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது.
கடந்த 2006-ம் ஆண்டு ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுடன் நடந்தபோரில், லெபனானில் 1,200 பேரும், இஸ்ரேலில் 160 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரான்ஆதரவுடன் செயல்படும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளிடம் ஆயிரக்கணக்கில் ராக்கெட் குண்டுகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இருபுறமும் தீவிரவாதிகள் மீதானதாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியதால், எல்லை பகுதிகளில் போர்உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
இஸ்ரேலுக்கு 8 பில்லியன் டாலரில் ராணுவ உதவி: ஜோ பைடன் ஒப்புதல்
இஸ்ரேல் போர் பதற்றம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியபோது, ‘‘தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் கடமை, உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது. தீவிரவாத தாக்குதலை நியாயப்படுத்த முடியாது.இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிசெய்ய, அமெரிக்காவின் ஆதரவு கட்டாயம் உண்டு. இஸ்ரேலின் தேவை குறித்துகேட்டறியுமாறு அமெரிக்க பாதுகாப்பு குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளேன். எகிப்து, துருக்கி, கத்தார், சவுதிஅரேபியா, ஜோர்டான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம்,ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி, நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க பாலஸ்தீன அதிகாரிகளுடனும் தொடர்பில் இருக்குமாறு எனது குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளேன்’’ என்றார்.
இஸ்ரேலுக்கு 8 பில்லியன் டாலர் மதிப்பில்ராணுவ உதவி அளிக்கவும் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். ‘‘இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இஸ்ரேலில் இந்திய மாணவர்கள் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியானது. இஸ்ரேலில் படிக்கும் கோகுல் மணவாளன் என்ற மாணவர் கூறும்போது, ‘‘பதற்றமான சூழலில் வாழ்கிறோம். இஸ்ரேல் போலீஸார் பாதுகாப்பு வழங்குவதால் இப்போதைக்கு பாதுகாப்பாக இருக்கிறோம். இந்திய தூதரகத்துடன்தொடர்பில் உள்ளோம்’’ என்றார்.
ஆதித்யா கருணாநிதி நிவேதிதா என்ற மாணவிகூறும்போது, ‘‘இதுபோன்ற இக்கட்டான சூழல் வரும் என்று நினைக்கவில்லை. 8 மணி நேரம் பாதாள அறையில் தங்கியிருந்தோம். இருக்கும் இடத்தைவிட்டு வெளியே செல்ல கூடாது என்று போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர். மிகுந்த அச்சத்துடன் வாழ்கிறோம்’’ என்றார்.
இதுகுறித்து மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி கூறியபோது, ‘‘இஸ்ரேல் நிலவரத்தை பிரதமர் அலுவலகம் நேரடியாக கண்காணித்து வருகிறது. அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
4 hours ago
உலகம்
4 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago