காசாவில் இருந்து பாய்ந்த ஏவுகணைகள்: 'போர் நிலை' அறிவித்த இஸ்ரேல் - பாதுகாப்புத் துறை ஆலோசனை

By செய்திப்பிரிவு

டெல்அவிவ்: சர்ச்சைக்குரிய காசா பகுதியில் இருந்து இன்று (சனிக்கிழமை) அதிகாலை இஸ்ரேல் நோக்கி ஒரே நேரத்தில் பல ஏவுகணைகள் பாய்ந்த நிலையில் இஸ்ரேல் போரை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையே உள்ளது காசா பகுதி. இது தன்னாட்சி பெற்ற பகுதியாக காசா முனை பகுதி உள்ளது. இந்தப் பகுதி ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது. இவ்வமைப்புத்தான் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது என்பது இஸ்ரேலின் நீண்ட கால குற்றச்சாட்டு. ஹாமஸுக்கு தேவையான நிதி உதவிகளை ஈரான் செய்து வருவதாகவும் இஸ்ரேல் கூறிவருகிறது.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து காசாவைக் கைப்பற்ற முயற்சிக்கிறது என்பது பாலஸ்தீனத்தின் குற்றச்சாட்டு. இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொள்வதும் தாக்குதல் நடத்திக் கொள்வதும் தொடர்கதையாக இருக்கிறது. இஸ்ரேல் பதில் தாக்குதல்களை காசாவை நோக்கி நடத்துவதால் காசா குடிமக்கள் எப்போதும் உயிர்ப்பயத்துடன் தான் இருக்கிறார்கள் என்பது நடுநிலை நாடுகளின் கருத்து.

இந்நிலையில், இன்று காலை இஸ்ரேலை நோக்கி பல ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. ஒரு சில ஊடகங்கள் 5000 ஏவுகணைகள் வரை பாய்ந்ததாகக் கூறுகின்றன. ஆனால் ஏவுகணைகளின் எண்ணிக்கையை இஸ்ரேல் இன்னும் அதிகாரபூர்வமாக உறுதி செய்யவில்லை.

ஆனால் சற்றும் எதிர்பாராத திடீர் ஏவுகணைகள் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் அபாய ஒலிகள் ஒலிக்க இஸ்ரேல் அரசு போர் நிலை சூழல் உருவாகியுள்ளதாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படையானது ஹமாஸ் தீவிரவாதிகள் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளதாக தெரிவித்துள்ளது. பாராகிளைடிங் செய்து தீவிரவாதிகள் ஊடுருவியக் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் இருப்பதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும் காசா பகுதியை ஒட்டிய இடங்களில் வசிக்கும் இஸ்ரேல் நாட்டு மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

ஐடிஎஃப் எனப்படும் இஸ்ரேல் டிஃபன்ஸ் ஃபோர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காசா பகுதியில் இருந்து இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளிலும் ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது. பல்வேறு வழிகளில் இருந்தும் இஸ்ரேலுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர். இதனால் இஸ்ரேலின் தெற்கு மற்றும் மையப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக காசாவை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளது, பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் படைகளை தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

இன்றைய தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சில குழந்தைகள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் காயங்களுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக உலக நாடுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல பாதிப்புகளை எதிர்கொண்டுவரும் சூழலில் இஸ்ரேல் மீதான இந்தத் தாக்குதல் இஸ்ரேல் - பாலஸ்தீன போருக்கு தூபம் போடுவதுபோல் அமைந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

25 secs ago

உலகம்

2 hours ago

உலகம்

2 hours ago

உலகம்

3 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

மேலும்