‘ஹாரிபாட்டர்’ படங்களில் டம்பில்டோர் கதாபாத்திர நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார்

By செய்திப்பிரிவு

லண்டன்: ‘ஹாரிபாட்டர்’ படங்களில் டம்பில்டோர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார். அவருக்கு வயது 82. சுமார் 60 ஆண்டு காலம் நடிப்பு சார்ந்து இயங்கியவர்.

‘ஹாரிபாட்டர்’ படங்களில் ஹாக்வார்ட்ஸ் தலைமை ஆசிரியர் (Professor) ஆல்பஸ் டம்பில்டோர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் அறியப்படுகிறார். ஹாரிபாட்டர் கதையை அடிப்படையாக கொண்டு வெளியான 8 படங்களில் 6-ல் இவர் நடித்துள்ளார். நிமோனியா பாதிப்பால் அவர் உயிரிழந்துள்ளார். அவரது மறைவு செய்தியை அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்துள்ளது. அப்போது அவரது மனைவி ஆன் மற்றும் மகன் ஃபெர்க்யூஸ் உடன் இருந்துள்ளனர். பிரிட்டன் நாட்டின் முன்னணி நடிகராக மைக்கேல் கேம்பன் அறியப்படுகிறார். 1950-ல் அயர்லாந்தில் பிறந்த அவர் லண்டனில் வளர்ந்தார். தனது தந்தையின் வழியில் நாடக துறையில் நாட்டம் கொண்டார். தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்தவர் சினிமாவிலும் நடித்து அசத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

8 days ago

உலகம்

10 days ago

மேலும்