பாகிஸ்தானிலுள்ள பெஷாவர் வேளாண் பல்கலைக்கழகத்தில் புர்கா அணிந்து மாறு வேடத்தில் வந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 மாணவர்கள் உள்ளிட்ட 12 பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து பெஷாவர் நகர போலீஸார் கூறும்போது, ''பாகிஸ்தானில் இன்று (வெள்ளிக்கிழமை) ரிக்ஷாவில் புர்கா அணிந்து கொண்டு மாறுவேடத்தில் வந்த தீவிரவாதிகள் பெஷாவரிலுள்ள வேளாண்மை பல்கலைழகத்துக்குள் நுழைந்து அங்கிருந்த மாணவர்களைத் தாக்கினர். இதில் 12 மாணவர்கள் கொல்லப்பட்டனர். 32 பேர் காயமடைந்தனர். இறந்த 12 பேரில் 6 பேர் மாணவர்கள், பொதுமக்கள் 5 பேர், ஒருவர் காவலாளி.
தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர், இதில் 4 ராணுவ அதிகாரிகள் காயமடைந்தனர்'' என்றார்.
இந்தத் தாக்குதல் குறித்து அப்பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கூறும்போது, ''பல்கலைக்கழக விடுதியில் பொதுவாக 400 மாணவர்கள்வரை இருப்பார்கள். தற்போது நீண்ட நாள் விடுப்பு என்பதால் 120 மாணவர்கள் மட்டுமே தங்கி இருந்தனர். நாங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது துப்பாக்கிச் சத்தம் கேட்டதால் உடனடியாக எழுந்து விட்டோம். எல்லோரும் சத்தமிட்டுக் கொண்டே அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்'' என்றார்
தொடர்ந்து அப்பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தி வருவதால் அப்பல்கலைக்கழகத்துக்கு செல்லும் சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதலுக்கு தாலிபன்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago