கனடா நாட்டின் பணக்கார தம்பதியினரின் மர்ம மரணம்: போலீஸார் அதிர்ச்சி

By ராய்ட்டர்ஸ்

கனடா நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களான பேரி ஷெர்மன், மனைவி ஹனி ஷெர்மன் தம்பதியினர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் புதிராக உள்ளது என்றும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது என்றும் கனடா போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கனடாவின் மிகப்பெரிய மருந்து உற்பத்தி நிறுவனமான அபோடெக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பேரி ஷெர்மன் ஆவார்.

இந்நிலையில் இவர் மற்றும் இவரது மனைவியின் உடல் டொராண்டோ நகர் வடகிழக்குப் பகுதியில் போர்வை ஒன்றில் சுற்றப்பட்டு அவர்கள் இல்லத்திலிருந்து அகற்றப்பட்டு, அனாமதேய வேன் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கனடாவின் மிகப்பெரிய பணக்கார குடும்பங்களில் ஒன்றான இந்தத் தம்பதியினரின் உடல் இப்படி அனாதையாக வேனில் கிடந்தது அங்கு பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளன.

போலீஸ் டேவிட் ஹாப்கின்ஸ் கூறும்போது, “இருவரும் இறந்து கிடந்த சூழ்நிலை சந்தேகத்துக்கிடமாக உள்ளது. மனித விரோதக் கொலைகளை கண்டுபிடிக்கும் விசாரணை புலனாய்வாளர்கள், இவர்கள் வீட்டினுள் யாரேனும் வலுக்கட்டாயமாக புகுந்ததற்கான தடயங்கள் எதுவும் இல்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

தம்பதியினரின் அண்டை வீட்டார், உறவினர்கள், நண்பர்கள், இவரது வர்த்தக சகாக்கள், அதிகாரமிக்க அரசியல் தலைவர்கள் ஆகியோர் இருவரது மரணம் கண்டு அதிர்ச்சியும் துக்கமும் அடைந்துள்ளனர்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியு தன் ட்விட்டரில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ஷெர்மன் தம்பதியினர் சமீபத்தில் தங்கள் இல்லத்தை விற்பனைக்கு அறிவித்திருந்தனர். இந்நிலையில் ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் ஒருவதான் தம்பதியினரின் உடலை பேஸ்மெண்ட்டில் கண்டுபிடித்துள்ளார்.

ஷெர்மன் (75), 1974-ம் ஆண்டு அபோடெக்ஸ் நிறுவனத்தை சொந்தமாக உரிமை கொண்டிருந்தார். பிறகு குறைந்த விலை ஜானரிக் மருந்துகளை அறிமுகம் செய்து பெரிய அளவில் சந்தையில் தன் நிறுவனத்தை நிலைநாட்டினார். தலைமைச் செயலதிகாரியாக 2012-ல் விலகிய ஷெர்மன் தலைவராக நீடித்து வந்தார். போர்ப்ஸ் நிறுவனம் இவரது சொத்துக்களை 3.2 பில்லியன் டாலர்கள் என்று நிர்ணயித்தது.

அபோடெக்ஸ் நிறுவனம் உலகில் 7-ம் இடத்தில் உள்ள மிகப்பெரிய ஜானரிக் மருந்து உற்பத்தி நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் சுமார் 11,000 பேர் பணியாற்றி வருகின்றனர். 45 நாடுகளில் இவரது மருந்துகள் விற்கின்றன, ஆண்டு விற்பனை சுமார் 2பில்லியன் கனடா டாலர்களாகும்.

சமூக சேவைகளில் தம்பதியினர் பெரிய நாட்டம் காட்டி வந்தனர், மருத்துவமனைகள், கல்விநிலையங்கள், யூத அமைப்புகளுக்கு பெரிய அளவில் பொருளுதவி செய்து வந்தனர், இவர்களது இழப்பு தேசத்தின் மிகப்பெரிய இழப்பாக கனடாவில் பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்