ஃபேஸ்புக்கில் துப்பாக்கிகள் மற்றும் போதைப் பொருட்களைக் கையாள ரகசியக் குழுக்களைப் பயன்படுத்தி வருவதாக 50 பேரை சிகாகோ காவல்துறை கைது செய்துள்ளது.
இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் எட்டீ ஜான்சன், ''இந்த விவகாரத்தில் ஃபேஸ்புக் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமெனில் ரகசியக் குழுக்களில் உள்ளவர்களைக் கண்டுபிடிக்கும் விசாரணையில் ஃபேஸ்புக் உதவிகரமாக இல்லை.
இந்நிலையில் காவல்துறையும் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனமும் இணைந்து சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவர்களைக் கண்டறியும் விசாரணையில் ஈடுபட்டோம்.
இதில் ஆண்களும் பெண்களும் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே குற்றப்பின்னணி கொண்ட 18 பேர் மேலும் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ரகசியக் குழுவில் ஒன்று, 'தேங்க்ஸ் கிவ்விங் ஸ்பெஷல்' நிகழ்வுக்காக கோக்கைன் போதைப் பொருள் பையின் வழக்கமான விலையான 60 டாலர்களில் இருந்து 40 டாலர்களாக விற்றது. கைது செய்யப்பட்டவர்களில் சிகாகோவைச் சேர்ந்த துவக்கப் பள்ளி ஆசிரியரும் அடக்கம்'' என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், ''எங்களுடைய தளத்தில் துப்பாக்கிகளையோ அல்லது போதைப் பொருட்களையோ விற்பனை செய்ய அனுமதிக்க மாட்டோம்.
இதுகுறித்து சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்'' என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க நகரங்களில் வன்முறை மிகுந்த நகரம் என்று சிகாகோவை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். 2016-ல் சிகாகோவில் 760 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago