ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக ஒருதலைபட்சமாக அமெரிக்கா அறிவிக்க இருப்பது கவலையளிப்பதாக உள்ளது என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் மக்ரோன் வெலியிட்ட அறிக்கையில், ”ஜெருசலமே இஸ்ரேலின் தலைநகரமாக அறிவிக்கும் அமெரிக்காவின் இந்த ஒருதலைபட்சமான முடிவு கவலை அளிப்பதாக உள்ளது.
ஜெருசலேம் தொடர்பான முடிவு இஸ்ரேல் - பாலஸ்தீன நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்ரம்பிடம் மக்ரோன் தொலைபேசியில் உரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக, அதிபர் ட்ரம்ப் அறிவிக்கக்கூடும் என்று வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ட்ரம்பின் இந்த முடிவு இரு நாடுகளுக்கும் இடையே பெரும் அரசியல் விளைவை ஏற்படுத்தும் என்று பாலஸ்தீன அரசியல் தலைவர்கள், அரபு தலைவர்கள் பலர் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், 'இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமை அறிவிக்கும் அமெரிக்காவின் எந்த நடவடிக்கையும் பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் சமாதான முடிவுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கப் போகிறது என்று பாலஸ்தீனம் அதிபர் மஸ்மூத் அப்பாஸி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
17 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago