ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அறிவித்துள்ளது இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே அமைதி பேச்சுவார்த்தைக்கான பாதையைத் தடுத்துள்ளது என்று ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்ததற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
துருக்கி, சவுதி , பாலஸ்தீனம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பலரும் ட்ரம்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், துருக்கி அதிபர் எர்டோகனை தொலைபேசியில் ரஷ்ய அதிபர் புதின் தொடர்பு கொண்டு இது விவகாரம் தொடர்பாக பேசியிருக்கிறார்.
இதுகுறித்து ரஷ்யா வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்க அதிபரின் இந்த முடிவு ஆழ்ந்த கவலையை அளித்துள்ளது. மேலும் இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான பாதையை இது தடுத்துள்ளது” என்றார்.
மேலும் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே அமைதி பேச்சுவார்த்தைக்கு புதின் அழைப்பு விடுத்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago