சிரியாவில் ரஷ்ய படைகளின் ஒரு பகுதியை திரும்ப பெறுகிறார் புதின்

By ஏஎஃப்பி

சிரியாவில் உள்ள தங்கள் நாட்டுப் படைகளின் ஒரு பகுதியை திரும்பப் பெறுவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (திங்கட்கிழமை) அவர் கூறும்போது, சிரியாவில் உள்நாட்டுப் போரில் பங்கெடுத்த எங்கள் நாட்டு ராணுவ வீரர்களின் ஒரு பகுதியை எங்கள் நாட்டுக்குத் திரும்ப அழைத்துக் கொள்ள பாதுகாப்பு அமைச்சகத்துக்கும், தலைமை ராணுவ வீரர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

சிரியாவில் ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத், டமாஸ்கஸை தலைநகராக கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார். அவருக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த மிதவாத எதிர்க்கட்சிகள் அலெப்போ நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றன.

இவர்கள் தவிர ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவின் பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அல்-காய்தா ஆதரவு அமைப்பான அல்-நஸ்ரா குறிப்பிட்ட சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இவர்களுக்கு மத்தியில் குர்து இன மக்கள் தனிப் பிரிவாக செயல்படுகின்றனர்.

மிதவாத எதிர்க்கட்சிகள் மற்றும் குர்து இன மக்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. இதற்குப் போட்டியாக அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவம் நேரடியாக களத்தில் போரிட்டு வருகிறது.

அண்மைக்காலமாக ரஷ்யாவின் ஆதரவால் அதிபர் ஆசாத்தின் கை ஓங்கி இருக்கிறது. கிளர்ச்சியாளர்கள்  கட்டுப்பாட்டிலிருந்த பல பகுதிகள் சிரிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது குறிப்பிடத்தகக்து.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

17 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்