ரஷ்யாவில் செயின்ட் பீட்ட்ரஸ்பர்க் நகரத்தில் பல்பொருள் அங்காடி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ரஷ்ய ஊடகங்கள் தரப்பில், “ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் புதன்கிழமை அடையாளம் தெரியாத பொருள் ஒன்று வெடித்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளனர்.
இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இந்தத் தாக்குதல் குறித்து போலீஸார் முதற்கட்ட விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பு குறித்து ரஷ்ய புலனாய்வுக்குழு தரப்பில், 200 கிராம் வெடிப்பொருட்கள் உள்ளடங்கிய சாதனம் ஒன்று சேமிப்புக் கிடங்கில் வாடிக்கையாளர்கள் பைகள் அருகில் வைக்கப்பட்டிருந்தபோது வெடித்துள்ளது. இது மிகப்பெரிய சேசத்தை ஏற்படுத்துவதற்கு முன்னதாகவே அந்தச் சாதனம் துண்டிக்கப்பட்டது.
முன்னதாக இம்மாதத் தொடக்கத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க அதிபர் ட்ரம்பை தொடர்பு கொண்டு, தனது சொந்த ஊரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் நடைபெறுவிருந்த தொடர் குண்டு வெடிப்புகளை தடுக்க உதவிய அமெரிக்காவின் மத்திய புலனாய்வுக் குழுவுக்கு நன்றி தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் சுரங்கப் பாதை ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில், 16 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அக்பர்த்சான் (22) என்ற இளைஞர் தற்கொலைப் படை தீவிரவாதியாக தன்னைத் தானே வெடிக்கச் செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago