சந்திரயான் திட்டம் வெற்றிபெற அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியினர் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரது கவனமும் இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தை நோக்கியே இருந்தது.

இந்த நிலையில், இஸ்ரோவின் இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்து, நிலாவில் லேண்டர் பத்திரமாக தரையிறங்க வேண்டி அங்குள்ள இந்திய வம்சாவளியினர் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி பல்வேறு மத வழிபாடுகளில் ஈடுபட்டனர். அபிஷேகம், யாகங்கள் உள்ளிட்ட மத சடங்குகளை நடத்தி சந்திரயான் திட்டம் வெற்றிபெற பகவானிடம் பிரார்த்தனை நடத்தினர்.

இதுகுறித்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராதிகா நாராயண் கூறுகையில், ” இந்தியா மகத்தான சாதனை படைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இஸ்ரோவின் ஒவ்வொரு பணிகளையும் பெருமிதத்துடன் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். திட்டம் வெற்றிபெற வாழ்த்துகள். எதிர்காலத்தில் இதுபோன்ற பல்வேறு சாதனைகளை இந்தியா படைக்கும்” என்றார்.

ஸ்ரீ லக் ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோயிலின் அர்ச்சகர் சாய் ஏ. ஷர்மா கூறுகையில், ” சந்திரயான் திட்டம் வெற்றிபெற வேண்டி சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டது. லக் ஷ்மிநரசிம்ம ஸ்வாமியின் ஆசீர்வாதத்தால் எல்லாம் நல்லதே நடக்கும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE