ஐஎஸ் தீவிரவாதிகள் 38 பேருக்கு ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றிய இராக்

By ஏஎஃப்பி

குண்டுவெடிப்பு, கொலை குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் 38 பேரை ஒரே நாளில் இராக் அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டு இராக்கின் நசிரியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஐஎஸ் தீவிரவாதிகள் 38 பேருக்கு வியாழக்கிழமை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது" என்றார்.

கடந்த செப்டம்பர் மாதம் 42 பேரை இராக் அரசு தூக்கிலிட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014-ம் ஆண்டில் இராக்கின் மோசூல் நகரம் உட்பட அந்த நாட்டின் பெரும் பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்க கூட்டுப் படைகளின் உதவியுடன் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக இராக் ராணுவம் போரில் ஈடுபட்டது.

ஐ.எஸ். வசம் இருந்த அனைத்து பகுதிகளையும் இராக் ராணுவம் படிப்படியாக மீட்டது.

இந்த நிலையில் இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துள்ளதாகவும், ஐ.எஸ். தீவிரவாதிகள் அனைவரும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் அந்த நாட்டு பிரதமர் ஹைதர் அல் பாக்தாதி கடந்த வாரம் அறிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்