அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் புதன்கிழமை உரையாற்றும்போது இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மேலும் தற்போது டெல் அவிவ் நகரத்திலுள்ள அமெரிக்க தூதரகம் ஜெருசலேமுக்கு மாற்றப்படும் என்றும், இந்த முடிவால் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே அமெரிக்கா மேற்கொண்டு வரும் அமைதி முயற்சிகள் தள்ளிப் போகாது என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.
இந்த நிலையில் ட்ரம்பின் இந்த முடிவுக்கு அரபு நாடுகள் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இராக் வெளியுறவுத் துறை அமைச்சர் இம்ராகிம் ஜஃப்ரி கூறும்போது, "அமெரிக்காவின் இந்த முடிவை நாங்கள் கண்டிக்கிறோம். இது புதிய மோதலை உருவாக்கும். ஜெருசலேம் தொடர்பாக நீண்ட காலமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாலஸ்தீனத்தில் அமெரிக்காவின் இந்த முடிவு மேலும் பதற்ற நிலையை அதிகரித்துள்ளது” என்று கூறினார்.
அமெரிக்காவின் இந்த முடிவை எதிர்த்து துருக்கி, பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் மக்கள் அமெரிக்காவின் தேசியக் கொடியை எரித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
17 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago