ஜெருசலேம் மோதல்: இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் 2 பேர் பலி; 25 பேர் காயம்

By ஏஎஃப்பி

பாலஸ்தீனத்தின் காசா நகரில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் 2 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர்.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ட்ரம்ப் அறிவித்ததையடுத்து பாலஸ்தீனம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

மேலும் பாலஸ்தீனத்தின் காசா நகரிலிருந்து ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் பகுதிகள் மீது ராக்கெட்டுகளை வீசினர்.

இதனைத் தொடர்ந்து ஹமாஸ் தளங்களை குறிவைத்து வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேலின் ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியது இதில் ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்தனர்.

கடந்த 1967-ல் மத்திய கிழக்கு போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என்று அந்த நாடு அறிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் எங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. இந்த நிலையில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

இதனைத் எதிர்த்து ஆயிரக்கணக்கான பாலத்தீனிய ஆதரவாளர்கள் ஜோர்டான், எகிப்து, இராக், துருக்கி, இரான், துனிசியா ஆகிய நாடுகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

18 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்