மியான்மரில் இன அழிப்பு நடந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன: அமெரிக்கா

By கார்டியன்

மியான்மரில் இன அழிப்பு நடந்ததற்கான நிறைய ஆதரங்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்காவின் ஹோலோகாஸ்ட் மெமோரியல் மியூசியம் தெரிவித்துள்ளது.

மியான்மரில் ராக்கைன் மாவட்டத்தில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ள பகுதிகளில், மியான்மர் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் மியான்மர் அரசு ராணுவ நடவடிக்கையில் இறங்கியது.

இதில் போராட்டக்காரர்கள் உட்பட பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வங்கதேசத்துக்கு இடம்பெயர்ந்தனர்.

மியான்மரில் இன அழிப்பு நடந்ததாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வந்தன. இதற்கு மியான்மர் ராணுவமும், மியான்மர் அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில் மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு நடந்ததற்கு நிறைய ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்காவிலுள்ள மெமோரியல் மியூசியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புதன்கிழமை மெமோரியல் மியூசியம் கூறும்போது, "கடந்த ஒருவருடமாக தென்கிழக்கு ஆசிய உரிமைக் குழுவுடன் இணைந்து நடந்திய ஆய்வில் மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு நடந்ததற்காக நிறைய ஆதரங்கள் கிடைத்துள்ளன. இந்த ஆய்வு தொடர்பாக சுமார் 200க்கும் மேற்பட்ட ரோஹிங்கிய மக்கள் மற்றும் மியான்மர் தொழிலாளர்களிடம் நேர்காணல்கள் நடந்தப்பட்டன''என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடக்கும் வன்முறைகள் இன அழிப்பு நடைபெறுவதற்கான பாடப் புத்தகம் சான்று என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

5 hours ago

உலகம்

6 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்