வடகொரியாவின் சர்வாதிகாரியை தடுக்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது: ட்ரம்ப்

By ராய்ட்டர்ஸ்

வடகொரியாவின் சர்வாதிகாரியை தடுக்க வேண்டும் என்று தென்கொரிய சுற்றுப்பயணத்தில் இருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 11 நாட்கள் ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். ஜப்பான், தென் கொரியா, சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதலாவதாக ஞாயிற்றுக்கிழமை ஜப்பான் சென்ற அதிபர் ட்ரம்ப் அங்கு ஜப்பான் - அமெரிக்க இரு நாடு உறவு குறித்து ஆலோசித்ததுடன் தொடர்ந்து அத்துமீறி அணுஆயுத ஏவுகணை சோதனைகள் நடத்திவரும் வடகொரியாவுடன் இனியும் பொறுமையை கடைபிடிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து தென்கொரியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ட்ரம்ப் இன்று (செவ்வாய்க்கிழமை) சியோலில் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னுடன் இணைந்து, போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுவரும் தென்கொரிய - அமெரிக்க ராணுவப் படைகளை ஆய்வு செய்தார்.

அதன் பின் வீரர்களுடன் விருந்தில் பங்கேற்று ட்ரம்ப் உரையற்றினார்.இதனையடுத்து ட்ரம்பும், மூன் ஜே இன்னும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர் அதில் ட்ரம்ப் பேசும்போது, “வடகொரிய அதிபர் மூன் ஜே இன் சிறந்த மனிதர். அவர் சிறப்பான முறையில் எங்களுடன் ஒத்துழைக்கிறார்.

உயிர்களை அச்சுறுத்திவரும் வடகொரியாவின் சர்வாதிகாரியை தடுக்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்