வடகொரியா பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு: அமெரிக்கா அறிவிப்பு

By ஏஎஃப்பி

வடகொரியா பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் கூடுதல் பொருளாதாரத் தடைகளை அந்நாட்டின் மீது விதிக்கும் முயற்சியில் ட்ரம்ப் நிர்வாகம்  ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து திங்கட்கிழமை அமெரிக்க அதிபர் அமைச்சரவையில் ட்ரம்ப் பேசும்போது, "வடகொரியாவை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாக அமெரிக்கா அறிவிக்கிறது. இது சில ஆண்டுகளுக்கு முன்னரே நடந்திருக்க வேண்டும். ஆணுஆயுதங்கள் மூலம் வடகொரியா உலகத்தை அச்சுறுத்தி வருகிறது. சர்வதேச பயங்கரவாதத்துக்கு அந்நாடு ஆதரவு அளித்து வருகிறது.

ஒட்டோ வார்மியரின் மரணம் வடகொரியா மீதான எங்களது எண்ணத்தை மாற்றியமைத்தது. ஒரு அற்புதமான இளைஞர் வடகொரியாவின் கொடூரமான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார். வடகொரியா மீதான இந்த அறிவிப்பு அந்நாட்டின் மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க வழிவகுக்கும். ” என்று கூறினார்.

ஜார்ஜ் டபிள்யு புஷ் அதிபராக இருந்தபோது, வடகொரியா பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்ற பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. தற்போது ட்ரம்ப்  மீண்டும் வடகொரியாவை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்று அறிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் முதல், உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டது.

வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால் எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

12 mins ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்