வடகொரியாவின் அணுஆயுதங்களை தரைவழித் தாக்குதலால் மட்டுமே அழிக்க முடியும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஐ.நா. சபையின் எச்சரிக்கையை மீறி வட கொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதன் காரணமாக, அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
எனினும், அமெரிக்காவின் நடவடிக்கைகளை சிறிதும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.இதன் காரணமாக வடகொரியா, அமெரிக்கா இடையே வார்த்தை மோதல் உருவாகியுள்ளது.மேலும், இரு நாடுகளுக்கிடையே போர் பதற்ற சூழலும் உருவாகியுள்ளது.
இதன்காரணமாக தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் போர்ப் பயிற்சியிலும் ஈடுபட்டது. இந்த நிலையில் வடகொரியாவைத் தாக்குவதற்கு தொடர்ந்து வியூகங்களை அமெரிக்க ராணுவ தளமான பெண்டகன் வகுத்து வருகிறது.
இதுகுறித்து பெண்டகன் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ''வடகொரியாவின் அணுஆயுதங்களை தரைவழித் தாக்குதலால் மட்டுமே அழிக்க முடியும்'' என்று கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பான கடிதம் ஒன்றையும் அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரி ரெக்ஸ் டில்லர்சன் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு அமெரிக்க ராணுவம் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடகொரியாவுடன் பொறுமை காக்க முடியாது
ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, ''வடகொரியாவுடன் இனி பொறுமையை கடைபிடிக்க முடியாது. வடகொரியாவின் நடவடிக்கைகள் நாகரிக சமூகத்துக்கும், சர்வதேச சமாதானத்துக்கும் அச்சுறுத்தலாக உள்ளன'' என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
8 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago