ஜிஹாதிகள் திருந்தி வாழ 5 நட்சத்திர மறுவாழ்வு மையம்: சவுதி அரேபியாவில் புது முயற்சி

By ஏஎஃப்பி

உள்ளரங்க நீச்சல் குளம், சூரிய ஒளிவெள்ள முற்றங்கள், தொழிலுடையணிந்து பணிச்சின்னம் தாங்கிய ஊழியர்கள் என்று வன் முறை ஜிஹாதிகள் திருந்தி வாழ சவுதி வளாகத்தில் 5 நட்சத்திர தலம் ஒன்று அமைக்கப்பட்டு சவுதி அரேபியா ஜிஹாதிகள் மறுவாழ்வுக்காக புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது.

ரியாத்தில் உள்ள மொகமது பென் நயேஃப் மனநல ஆலோசனை மற்றும் சுகாதார மையம் சிறைச்சாலைக்கும், விடுதலைக்கும் இடைப்பட்ட நிலையை தன்னகத்தே கொண்டுள்ளது.

உலக அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் ஆளில்லா விமானத் தாக்குதல், சித்ரவதை, வதைமுகாம் என்று சென்று கொண்டிருக்கும் போது இந்த மறுவாழ்வு மையத்தின் அணுகுமுறை கருத்தியல் சிகிச்சை என்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

மதகுருமார்களும், உளவியல் நிபுணர்களும் இதில் ஜிஹாதிகளுக்கு உதவுகின்றனர், இங்கு மனநல மருத்துவத்துடன் மதநல மருத்துவமும் கருத்தியல் நச்சுச்சிந்தனையகற்ற சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

“எங்கள் கவனமெல்லாம் ஜிஹாதிகளின் சிந்தனைகள், அவர்களது தவறான கருத்தோட்டங்கள், இஸ்லாமியத்திலிருந்து பிரிந்து போன சிந்தனை ஆகியவற்றின் மீதுதான்” என்கிறது இந்த மையம்.

ஜிஹாதிகளுக்கான அறையில் பெரிய திரை தொலைக்காட்சிகள், பெரிய அளவு படுக்கைகளோடு நீண்ட நெடும் தாழ்வாரங்களும் இந்த வளாகத்தில் உள்ளன.

அல்-குவைதா மற்றும் தாலிபான் தீவிரவாதத்தில் தொடர்புடைய தீவிரவாத நோயாளிகள் வெள்ளை ஆடையில் சுதந்திரமாக இந்த வளாகத்தில் உலா வருகின்றனர்.

மதபாரம்பரியவாத வஹாபிய சன்னி இஸ்லாமியத்தை உலகம் முழுதும் ஏற்றுமதி செய்வதாக சவுதி அரேபியா மீது கடும் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், அதன் ஏற்றுமதியோடு உள்நாட்டிலும் வஹாபியத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது சவுதி அரேபியா, இங்கும் பயங்கரவாதத் தாக்குதல்கள் உள்நாட்டு பயங்கரவாதிகளால் நடத்தப்படுகிறது.

சவுதி இளவரசர் மொகமத் பின் சலமான் பயங்கரவாதத்தை பூமியிலிருந்து விரட்டுவோம் என்று சபதம் எடுத்துள்ள நிலையில், 2004-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த மறுவாழ்வு இல்லம், பயங்கரவாத வன்முறையை ஒழிக்க கருத்தியல் சிகிச்சையைக் கையில் எடுத்துள்ளது.

பயங்கரவாதம் தொடர்பாக குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட சுமார் 3,300 தீவிரவாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளித்துள்ளது, இதில் குந்தனாமோ பே சிறையிலிருந்து கொண்டு வரப்பட்டவர்களும் உண்டு.

இந்த மையத்தில் சிகிச்சை பெற்றவர்கள் மீண்டும் ஜிஹாதி பாதையில் செல்லாமல் இருந்து வருவதால் இந்த மனநல சிகிச்சை முறை பெரிய வெர்றி என்று இந்த மையம் கருதுகிறது.

ஆனால் பயங்கரவாதிகள் குறித்த அமெரிக்க நிபுணரோ மீண்டும் ஜிஹாதிகளாகும் விகிதம் அதிகம் என்கிறார். இந்த மையத்திலிருந்து சிகிச்சை பெற்று வந்தவர்களே மீண்டும் தீவிரவாத போர்முனைக்குத் திரும்புகின்றனர் என்கிறார் அவர்.

ஆனால் மற்றொரு நிபுணரான ஜான் ஹோர்கன் கூறும்போது, “வித்தியாசமான அணுகுமுறையைக் கடைபிடிக்கும் இந்த மையத்தை பாராட்ட வேண்டியதுதான், ஆனால் பெரிய அளவில் அதில் பங்கேற்பவர்கள் பற்றிய தகவல்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதால், மீண்டும் இவர்கள் தீவிரவாதத்துக்குள் செல்வார்கள் அல்லது செல்ல மாட்டார்கள் என்பதற்கான ஆதாரங்கல் நமக்குத் தெரியவருவதில்லை” என்கிறார்.

இந்த மையத்திற்கு சிகிச்சைக்குக் வந்து 3 மாதங்கள் ஆகியும் திருந்தாத ஜிஹாதிகள் நீதித்துறை வசம் ஒப்படைக்கப் படுவார்கள்.

வலுக்கட்டாய நடைமுறைகளை விட இந்த மையம் குடும்ப ரீதியான பிணைப்புகளை அதிகரித்துப்பார்க்கிறது, திருமணம், குழந்தைகள் என்று வாழ்க்கையைப் பார்க்க ஆரம்பித்தால் மீண்டும் வன்முறைக்கு திரும்பும் மனம் வராது என்று நம்பப்படுகிறது.

ஆதிக்கத்தின் மூலம் பயங்கரவாதத்தை விரட்ட் விட முடியாது, கருத்துக்களினால் உருவாக்கப்பட்ட நச்சுத்தன்மை கருத்துகளின் மூலம்தான் அகற்றப்பட முடியும் என்கிறார் கல்வியியல் உளப்பகுப்பாய்வு நிபுணர் அலி-அல் அஃப்னன் என்பவர். கலை, ஓவியம் ஆகியவையும் சிகிச்சை முறையில் உண்டு.

முன்னாள் ஜிஹாதி ஒருவர் ஆப்கானில் தாலிபான்களுடன் தீவிரவாதச் செயலில் ஈடுபட்டவர் தற்போது திருமணமாகி குழந்தைகளுடன் குடும்பஸ்தர் ஆகிவிட்டார். இவர்தான் திருந்தும் ஜிஹாதிகளுக்கு ரோல்-மாடல் என்கிறார் அஃப்னன். எந்த ஒரு மனிதனுக்கும் 2-ம் வாழ்வு உண்டு, வாய்ப்பளித்தால் வேறொரு வாழ்க்கை உண்டு என்பதற்கு பளிச்சிடும் உதாரணம் இவரே என்கிறது இந்த மையம் பெருமிதத்துடன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

39 mins ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்