2017-ம் ஆண்டின் சிறந்த மனிதராக ட்ரம்ப் அறிவிக்கப்படவில்லை: டைம்ஸ் பத்திரிகை

By கார்டியன்

ட்ரம்ப் கூறியது போல் 2017-ம் ஆண்டின் உலகின் சிறந்த மனிதராக அவர் அறிவிக்கப்படவில்லை என்று டைம்ஸ் பத்திரிகை கூறியுள்ளது.

டைம்ஸ் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் உலகின் சிறந்த மனிதர் பெயரை வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ''டைம்ஸ் பத்திரிகை என்னை நேர்காணல், ஃபோட்டோ ஷூட்டுக்காக அழைத்துள்ளது. மேலும் இந்த ஆண்டின் சிறந்த நபராக நான் தேந்தெடுக்கப்பட அதிகம் வாய்ப்புள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது'' என்று பதிவிட்டிருந்தார்.

ட்ரம்பின் இந்த பதிவுக்கு டைம்ஸ் பத்திரிகை மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டைம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''அதிபர் தவறாக கூறியுள்ளார். எங்களது பதிப்பு வெளிவரும்வரை நாங்கள் எந்த முடிவையும் அறிவிப்பது கிடையாது. வரும் டிசம்பர் 6-ம் தேதி இதன் முடிவு அறிவிக்கப்படுகிறது'' என்று கூறியுள்ளது.

மேலும் ட்ரம்ப் பதிவுக்கு டைம்ஸ் பதிப்பகத்தின் முன்னாள் ஆசிரியர் ரிச்சர்டு ஸ்டின்ஜெல் கூறும்போது, ''இதை கூறுவதற்கு விருப்பமில்லைதான்.... நீங்கள் இந்த ஆண்டின் சிறந்த நபராக அறிவிக்கப்படப் போவதில்லை என்பதை கூறிக் கொள்கிறேன். அவர்கள் உங்களை வெறும் ஃபோட்டோஷூட்டுக்காக மட்டும்தான் அழைத்துள்ளார்கள்'' என்று கூறியுள்ளார்.

2016-ம் ஆண்டின் சிறந்த மனிதராக டைம்ஸ் பத்திரிகையால் ட்ரம்ப் அறிவிக்கப்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

5 hours ago

உலகம்

6 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்