தென் அட்லாண்டிக் கடலில் 44 ஊழியர்களுடன் காணாமல் போன அர்ஜெண்டினாவின் நீர் மூழ்கிக் கப்பலைத் தேடும் பணியில் ரஷ்யா கை கோர்த்துள்ளது.
அர்ஜெண்டினாவைச் சேர்ந்த அரா சான் ஜுவான் என்ற நீர் மூழ்கிக் கப்பல் 44 ஊழியர்களுடன், தென் அட்லாண்டிக் கடலில் மின்சாரக் கோளாறு காரணமாக தொடர்பை இழந்தது.
இதனைத் தொடர்ந்து அக்கப்பலையும், அக்கப்பலில் இருந்த ஊழியர்கள் 44 பேரையும் தேடும் பணியில் அர்ஜெண்டினாவுக்கு உதவ பிரேசில், சிலி, கொலம்பியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகள் களம் இறங்கின.
எனினும் கப்பலைக் கண்டுபிடிக்க முடியாமல் அர்ஜெண்டினா கப்பற்படை திணறி வருகிறது.
இந்த நிலையில் சவால் நிறைந்த இந்தத் தேடுதலில் அர்ஜெண்டினாவுக்கு ரஷ்யாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.
இதுகுறித்து அர்ஜெண்டினா அதிபர், மௌரிசியோ மார்க்ரி கூறும்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு, நீர் மூழ்கிக் கப்பலைத் தேடும் பணியில் அனுபவம் மிகுந்த ஓர் ஆய்வுக் கப்பலைத் தங்கள் நாட்டின் சார்பாக அமர்த்த உதவுவதாக தெரிவித்துள்ளார்” என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago