பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் போராட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய ஊடகங்களுக்கு தடை

By ஏஎஃப்பி

இஸ்லாமாபாத்தில் நடைபெற்றுவரும் இஸ்லாமியக் குழுக்களின் போராட்டத்தைத் தடுக்க ராணுவம் எடுக்கும் நடவடிக்கையை நேரடி ஒளிபரப்பு செய்ய அந்நாட்டு ஊடகங்களுக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.

தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியை இணைக்கும் வகையில் கடந்த 20 நாட்களாக முகாமிட்டிருந்த இஸ்லாமியக் குழு ஆதரவாளர்களின் பேரணியைக் கலைக்க, பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாடாளுமன்ற மசோதா ஒன்றில் நபிகள் நாயகத்தின் குறிப்புகளைத் தவிர்த்த சட்ட அமைச்சரை பதவி விலக்க வேண்டும் என்று போராட்டக் குழுவினர் போராடி வருகின்றனர்.

இதையடுத்து பாகிஸ்தானிய காவல்துறை மற்றும் துணை ராணுவப் படை இணைந்து தெஹ்ரீக்-இ-லப்பைக் யா ரசூல் அல்லா கட்சியின் ஆதரவாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் கற்களை எறிந்து எதிர்ப்புகளைத் தெரிவித்த போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் ஏராளமானோரைக் கைது செய்தும் காவல்துறையினர் போராட்டத்தைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இஸ்லாமியக் குழுகளின் மீதான ராணுவ தடுப்பு நடவடிக்கைகளை தனியார் ஊடகங்கள் ஒளிபரப்புச் செய்ய பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் அரசு தரப்பில், "பாகிஸ்தான் அரசு ஊடகத்துக்கு மட்டும் நேரடி ஒளிப்பரப்பு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் ஊடகங்கள் இது தொடர்பான விவாதங்களை வேண்டுமானால் நடத்தலாம். ஆனால் நேரடி ஒளிப்பரப்புக்கு அனுமதிக்க முடியாது" என்று கூறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

36 mins ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்