தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியை இணைக்கும் வகையில் கடந்த 20 நாட்களாக முகாமிட்டிருந்த இஸ்லாமியக் குழு ஆதரவாளர்களின் பேரணியைக் கலைக்க, பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்து வருகிறது.
நாடாளுமன்ற மசோதா ஒன்றில் நபிகள் நாயகத்தின் குறிப்புகளைத் தவிர்த்த சட்ட அமைச்சரைப் பதவி விலக்க வேண்டும் என்று போராட்டக் குழுவினர் போராடி வருகின்றனர்.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை போராட்டம் பாதிப்பதாகவும் போராட்டத்தை நிறுத்தவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து பாகிஸ்தானிய காவல்துறை மற்றும் துணை ராணுவப் படை இணைந்து தெஹ்ரீக்-இ-லப்பைக் யா ரசூல் அல்லா கட்சியின் ஆதரவாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் கற்களை எறிந்து எதிர்ப்புகளைத் தெரிவித்த போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் ஏராளமானோரைக் கைது செய்தும் காவல்துறையினர் போராட்டத்தைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago