ஏமனிலுள்ள தீவிரவாதிகளுக்கு ஈரான் உதவி செய்கிறது என்று சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை சவுதியின் ரியாத் விமான நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுகுறித்து சவுதி தரப்பில், ஹவுதி கிளர்ச்சிப் படையினரிடம் ஏவுகணை தொழில்நுட்பம் கிடையாது. ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதல் முயற்சியில் ஈரான் ராணுவம் பின்னணியில் இருக்கிறது. . . ஏமனுக்கு எவ்வாறு ஏவுகணைகள் கடத்தப்படுகிறது என்பதை அம்பலப்படுத்துவோம் என்று கூறியிருந்தது.
இந்தநிலையில் ''அரேபிய சட்ட விதிகளுக்கு மாறாக ஏமனில் உள்ள தீவிரவாதிகளுக்கு ஈரான்தான் உதவி செய்து வருகிறது'' என்று சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆனால் சவுதி இளவரசரின் இந்தக் குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது
முக்கிய செய்திகள்
உலகம்
8 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago