நியூயார்க் டிரக் தாக்குதலை நடத்தியது நாங்களே: ஐஎஸ்

By ஏஎஃப்பி

நியூயார்க்கில் சரக்கு லாரியை மோத வைத்து 8 பேரைக் கொலை செய்த சைபுல்லா சாய்போவ், தங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று ஐஎஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க கண்காணிப்புக் குழு செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி ஐஎஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''ஐஎஸ் இயக்கத்தின் போர் வீரர்களில் ஒருவர் நியூயார்க் நகரத் தெருவில் தாக்குதல் நடத்தினார்.

அல்லாவின் கருணையால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன், அமெரிக்காவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தவும், அமெரிக்கா நோக்கி வரும் அகதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் தூண்டியுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?

அமெரிக்காவின் நியூயார்க்கில் மன்ஹேட்டன் பகுதி ஹுஸ்டன் சாலையில் நவ.1-ம் தேதி வெள்ளை நிற சரக்கு லாரி ஒன்று அங்கிருந்த பாதசாரிகள் மீது கண்மூடித்தனமாக மோதியது. இதில் 8 பேர் பலியாகினர்.

இந்தத் தாக்குதலை நடத்தியதாக சைபுல்லா சாய்போவ் என்பவரை அமெரிக்க போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக சைபுல்லா சாய்போவ் மீது தீவிரவாத குழுவுக்கு ஆதரவு அளித்தவர், வாகனங்களை சேதப்படுத்தியவர் என்ற வழக்குகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையில் தாக்குதல் நடத்திய நபர் உஸ்பெகிஸ்தானை சேர்ந்த சைபுல்லா சாய்போவ் (29) என்பது தெரியவந்துள்ளது. கடந்த 2010-ம் ஆண்டில் சைபுல்லோ அகதியாக அமெரிக்காவில் குடியேறியுள்ளார். ஒஹையோ, புளோரிடாவில் வசித்த அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நியூஜெர்ஸியில் குடியேறியுள்ளார்.

தனியார் கால் டாக்ஸி நிறுவனத்தில் ஓட்டுநராகவும், சரக்கு வாகன ஓட்டுநராகவும் பணியாற்றி வந்துள்ளார். சைபுல்லா ஓட்டிய வாகனத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடி, ஆதரவு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சைபுல்லோவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

11 hours ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்