ரோஹிங்கிய முஸ்லிம்களை மியான்மர் அழைத்து வர பேச்சு: ஆங் சான் சூச்சி

By ராய்ட்டர்ஸ்

ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மருக்கு அழைத்து வருவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக மியான்மர் அரசுத் தலைவர் ஆங் சான் சூச்சி கூறியுள்ளார். .

மியான்மரில் ராக்கைன் மாவட்டத்தில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ள பகுதிகளில், மியான்மர் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் மியான்மர் அரசு ராணுவ நடவடிக்கையில் இறங்கியது.

இதில் போராட்டக்காரர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வங்கதேசத்துக்கு இடம்பெயர்ந்தனர்.

மியான்மர் அரசின் இந்த ராணுவ அடக்குமுறைகளை ஐ. நா சபை உள்ளிட்ட பல உலக நாடுகள் கண்டித்தன. மியான்மரில் நடக்கும் வன்முறை சம்பவங்களுக்கு அந்நாட்டு தலைவர் ஆங் சான் சூச்சி தொடர்ந்து மவுனம் காத்து வருவதாக உலக நாடுகளின் தலைவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

தொடர் விமர்சனங்களுக்குப் பிறகு, மியான்மரில் வன்முறை குறித்து சூச்சி, 'மியான்மர் நெருக்கடி குறித்து தவறான புகைப்படங்கள், தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன' என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஒரு மாதத்துக்குப் பிறகு கலவரம் ஏற்பட்ட பகுதிகளை சூச்சி பார்வையிட்டார்.

இந்த நிலையில் மியான்மர் தலைநகரம் நைப்பியிதோவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த ஆசிய - ஐரோப்பிய கூட்டத்தில் ராக்கைன் மாவட்டத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆங் சான் சூச்சி பதிலளித்தார்.

இதுகுறித்து ஆங் சான் சூச்சி கூறும்போது, ''ராக்கைன் மாவட்டத்தில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக மனித உரிமை மீறல் நடந்ததா இல்லையா என்று என்னால் கூற முடியாது. ஆனால் இனி அம்மாதிரியான சம்பவம் நடக்காது என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். ரோஹிங்கிய முஸ்லிம்களை மியான்மருக்கு அழைத்து வருவது தொடர்பாக வங்கதேச அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்