கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவின் கடற்கரை பகுதியில் ஒதுங்கிய மர்ம பொருள் இந்திய ராக்கெட் இன்ஜினாக இருக்கலாம் என ஐரோப்பிய விண்வெளி நிறுவன பொறியாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு வடக்கே 250 கி.மீ தொலைவில் உள்ள கடற்கரை பகுதியில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. ஒரு சிறிய கார் அளவுக்கு உருண்டையாக இருக்கும் அந்த பாகம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ராக்கெட் இன்ஜின் பாகமாக இருக்கலாம் என ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம், வெளிநாடுகளைச் சேர்ந்த விண்வெளி நிறுவனங்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஐரோப்பிய விண்வெளி முகமையின் பொறியாளர் ஆண்ட்ரியா பாய்ட், ஆஸ்திரேலிய கடற்கரையில் ஒதுங்கிய பாகம் இந்திய ராக்கெட்டின் மேல் அடுக்கு இன்ஜின் போல் தெரிகிறது என தன்னுடன் பணியாற்றுபவர்கள் கூறுவதாக தெரிவித்துள்ளார்.
விண்வெளியில் இருந்து கடலில் விழும் ராக்கெட் அல்லது செயற்கைக்கோள் பாகமாக இருந்தால், அதை அகற்றும் பொறுப்பு, அதை விண்ணில் ஏவிய நாடுகளையே சாரும் என சர்வதேச நாடுகளின் விண்வெளி ஒப்பந்தத்தில் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
11 mins ago
உலகம்
44 mins ago
உலகம்
1 hour ago
உலகம்
2 hours ago
உலகம்
2 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago