வட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனை வெற்றி: கிம் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

பியாங்யாங்: வட கொரியா ‘ஹ்வாசோங்-18’ என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) சோதனையை வெற்றிகரமாக பரிசோதித்தது குறித்து அந்நாட்டு அதிபர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

‘ஹ்வாசோங்-18 சோதனை வெற்றிக்கரமாக முடிந்ததைக் கண்ட அதிபர் கிம் வெள்ளை உடையில் மகிழ்ச்சியாக கைதட்டினார். ஹ்வாசோங்-18 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றி, கிம்மை மிகுந்த மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்தப் புதிய ஏவுகணை ஆகாயத்தில் 74 நிமிடங்கள் பயணித்து இலக்கை அடைந்தது. ஆகாயத்தில் நீண்ட நேரம் பயணிக்கும் வடகொரியாவின் ஏவுகணையாக இது கருதப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் வட கொரியா சோதனை செய்த ஏவுகணை 6,648 கிமீ உயரத்தில் 1,001 கிலோமீட்டர்கள் பயணித்து ஜப்பானின் கிழக்கு பகுதியில் விழுந்தது. இது, உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மீண்டும் ஏவுகணை தாக்குதல் பரிசோதனையில் கடந்த சில மாதங்களாக வடகொரியா ஈடுபட்டு வருகிறது

அமெரிக்கா - தென் கொரிய படைகள் கொரிய தீபகற்பத்தில் கடந்த சில மாதங்களாகவே ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், இரு நாடுகளும் மிகப் பெரிய ராணுவ பயிற்சிக்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான், வடகொரியா தொடர்ந்து எவுகணை சோதனைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE