30 வயதான சமூக வலைதள ஃபிட்னஸ் பிரபலம் ஜோ லின்ட்னர் காலமானார்

By செய்திப்பிரிவு

30 வயதான சமூக வலைதள ஃபிட்னஸ் பிரபலம் ஜோ லின்ட்னர் காலமானார். அவருக்கு அனீரிசிம் பாதிப்பு ஏற்பட்டது அவரது மரணத்திற்கு காரணம் என தெரிகிறது. இதனை அவரது காதலி சமூக வலைதள பதிவில் உறுதி செய்துள்ளார்.

ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஜோ லின்ட்னரை இன்ஸ்டாகிராம் தளத்தில் சுமார் 8.5 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். யூடியூப் தளத்தில் சுமார் 1 மில்லியன் பேர் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர். ஃபிட்னஸ் சார்ந்த ஆலோசனைகளை அவர் அதில் பகிர்ந்து வந்தார். இந்நிலையில், ஜூன் 30 அன்று அவர் உயிரிழந்துள்ளார்.

அவர் உயிரிழப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அவரது கழுத்து பகுதியில் வலி இருந்துள்ளது. அதனை அவரை சுற்றி இருந்தவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதன் பின்னர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தான் அவரது உயிர் பிரிந்துள்ளது. அவர் மரணத்திற்கு காரணம் அனீரிசிம் பாதிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை சமூக வலைதளத்தில் பின்தொடர்ந்து வருபவர்கள், நண்பர்கள் என பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அவரது இளவயது மரணத்திற்கான காரணம் குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

11 days ago

உலகம்

11 days ago

உலகம்

12 days ago

மேலும்