மாஸ்கோ: ரஷ்யாவுடனான போரில் எல்லா திசைகளிலும் உக்ரைன் படைகள் முன்னிலையில் உள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு முனைகளில் ரஷ்யாவுக்கு எதிராக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் உக்ரைன் படைகளை அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து வருகிறார். டொனஸ்க் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்ட அவர், பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, “இது மகிழ்ச்சியான நாள். தோழர்களுக்கு இது போன்ற பல நாட்கள் வர வாழ்த்துகிறேன். இது ஒரு வேலை மிகுந்த நாள். நிறைய உணர்வுப்பூர்வ உணர்ச்சிகள் நிரம்பி உள்ளன. எங்கள் போர் வீரர்களுக்கு விருது வழங்குவதற்கும், அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி கூறுவதற்கும், அவர்களுடன் கை குலுக்குவதற்கும் நான் பெருமைப்படுகிறேன்” என்று மகிழ்ச்சியாக பேசினார்.
உக்ரைன் போரில் தேவைப்படும்போது பயன்படுத்த ஏதுவாக முதல் தொகுதி அணு ஆயுதங்களை ரஷ்யா தனது நட்பு நாடான பெலாரஸுக்கு அனுப்பிவைத்துள்ளதாக அதிபர் புதின் அறிவித்தார். புதினின் அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரஷ்யாவின் ஆயுதப் படை அமைப்புகளில் ஒன்றான வாக்னர் அமைப்பு புதினுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்தது. பின்னர் இரு தரப்புக்கு இடையே உடன்படிக்கை ஏற்பட்டதை தொடர்ந்து ரஷ்யாவில் ஏற்பட இருந்த பிளவு தவிர்க்கப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உக்ரைன் படைகள் தற்போது அனைத்து பகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருவதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
3 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago