அமெரிக்காவில் 1882-ம் ஆண்டு தொடங்கப்பட்ட லாட்டி நியூயார்க் பேலஸ் ஓட்டலில் தங்கியுள்ளார் பிரதமர் மோடி
நியூயார்க்: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, நியூயார்க் நகரில் உள்ள பிரபல ‘லாட்டி நியூயார்க் பேலஸ் ஓட்டலில்’ தங்கியுள்ளார்.
- இந்த ஓட்டல் கடந்த 1882-ம்ஆண்டு தொடங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்கது. இந்தஇடம் முன்பு வில்லார்ட் ஹவுசஸ் என அழைக்கப்பட்டது. 51 மாடியுடன் கூடிய இந்த ஓட்டல் 563 அடி உயரம் கொண்டது.
- வில்லார்ட் ஹவுசஸ் பகுதியில் 55 மாடி கொண்ட ஹெம்ஸ்லே பேலஸ் ஓட்டலை ஹேரி ஹெம்ஸ்லே என்ற தொழிலதிபர் கட்டினார்.
- கடந்த 1992-ம் ஆண்டு இந்த ஓட்டலை புருனே சுல்தான் வாங்கினார்.
- கடந்த 2011-ம் ஆண்டு இந்தஓட்டல், நார்த்வுட் இன்வெஸ்டர்ஸ் நிறுவனத்திடம் விற்கப்பட்டது.
- தென்கொரியாவைச் சேர்ந்த லாட்டி ஹோட்டல் அண்ட் ரிசார்ட்ஸ் நிறுவனம், இந்த சொகுசு ஓட்டலை கடந்த 2015-ம்ஆண்டில் வாங்கி ‘லாட்டி நியூ யார்க் பேலஸ் ஓட்டல்’ என பெயர் மாற்றியது.
- இங்கு 800-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இங்கு தங்குவதற்கு ஓர் இரவுக்கு ரூ.48,000 முதல் ரூ.12 லட்சத்து 15 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்குதங்கியுள்ள பிரதமர் மோடிடெஸ்லா நிறுவன சிஇஓஎலான் மஸ்க் உட்பட தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், சுகாதார நிபுணர்கள் உட்பட பலரை சந்தித்து பேசினார்.
- இன்று வாஷிங்டன் செல்லும் பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவருக்கு அமெரிக்க அதிபர்ஜோ பைடன் மற்றும் அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோர் விருந்தளிக்கின்றனர். இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோா் பங்கேற்கின்றனர்.
- அமெரிக்கா நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி நாளை உரையாற்றுகிறார்.
- அதன்பின் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பிரதமர் மோடிக்கு விருந்தளிக்கிறார். அப்போது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோனி பிளிங்கெனும் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.