அட்லாண்டிக்: அட்லாண்டிக் கடலில் மாயமான நீர்ழுழ்கிக் கப்பலில் பயணித்தவர்களை தேடும் பணி 48 மணி நேரமாக நடந்து வருகிறது.
21 அடி கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று 5 சுற்றுலாப் பயணிகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்லாண்டிக் கடலில் பயணப்பட்டது. ஆனால் புறப்பட்ட 2 மணி நேரத்துக்குள் அந்த நீர் மூழ்கிக் கப்பல் தனது சிக்னலை இழந்துள்ளது. இந்நிலையில் மாயமான நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணி 48 மணி நேரமாக தொடர்ந்து வருகிறது.
மாயமானவர்களை தேடும் பணியில் கனடா - அமெரிக்கா கடற்படைகள் இறங்கிவுள்ளன. இந்த நிலையில் அமெரிக்க கடலோர காவல்படையின் வடகிழக்கு பிரிவு , தேடுதலில் ஈடுபட்டுள்ள கனடா விமானம் ஒன்று ஆழ்கடலில் ஒலிகளைக் கேட்டறிந்ததாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இரண்டு பொருட்கள் மோதுவதால் ஏற்படும் ஒலியை கடலுக்கு அடியில் கருவிகளை செலுத்திக் கண்டறிந்ததாக அது கூறியுள்ளது. ஆனால் அது இரு பொருட்கள் மோதுவதால் ஏற்படும் ஒலிதானா என்பதை உறுதிப்படுத்தவில்லை. தேடுதல்களில் தங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கவில்லை என்றும் அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளனர்.
மேலும் தேடுதலில், ஆழ்கடல் ஆய்வுகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்ற பிரிட்டிஷ் நிறுவனமான மாகெல்லன், மீட்புப் பணிக்கு உதவுவதாகவும் கூறியுள்ளது.
» நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
» Lust Stories 2 | கஜோல், தமன்னா, மிருணாள் தாக்கூர் நடிக்கும் ஆந்தாலஜியின் ட்ரெய்லர் எப்படி?
நீர் மூழ்கிக் கப்பலில் பயணித்தார்கள் விவரம்...
> ஹமிஷ் ஹார்டிங் (58) பிரிட்டனைச் சேர்ந்த இவர் தொடர்ந்த கடல் சார்ந்த சாகசங்களில் ஆர்வம் மிக்கவராக அறியப்படுகிறார்.
> ஷாசாதா தாவூத் (48) பாகிஸ்தானின் பெரும் செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மகன் 19 வயதான சுலைமான் தாவூத்.
> பால் ஹென்றி - பிரான்ஸ் கடற்படையின் முன்னாள் மாலுமி.
> ஸ்டாக்டன் ரஷ், 61, டைட்டானிக் பயணங்களை இயக்கும் நிறுவனமான ஓஷன் கேட்டின் தலைமை நிர்வாகி.
ஒஷன் கேட் நிறுவன நீர் மூழ்கிக் கப்பல்களுக்கு கடலில் 1200 மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் டைட்டானிக் கப்பலைக் காண வேண்டியதற்கு விதிகளை மீறி அந்த நீர் முழ்கிக் கப்பல் 3,000 மீட்டர்கள் தாண்டி பயணித்ததாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்தச் சூழலில் விரைவில் மாயமான நீர் முழ்கி கப்பல் விரைவில் மீட்கப்படும் என்று அமெரிக்க - கனடா கடற்படையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
7 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
2 days ago