இராக்கில் ஐஎஸ்ஸின் கோட்டையாக இருந்த ஹவாஜி நகரை இராக் அரசுப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இராக் அரசுப் படைகள் அமெரிக்கப் படையுடன் இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதுகுறித்து இராக் அரசுப் படைகள் தரப்பில், "ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த ஹவாஜி நகரை மீட்டுள்ளோம். மேலும் ஐஎஸ் தீவிரவாதிகளை நோக்கி முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஜூனில் மோசூல் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். அந்நகரை மீட்க, கடந்த 2016 அக்டோபரில் மிகப்பெரிய போர் தொடுக்கப்பட்டது. கடந்த 6 மாத போருக்குப் பிறகு மேற்கு மோசூல் பகுதியை அரசுப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளன.
அமெரிக்க கூட்டுப் படைகளின் ஆதரவுடன் இராக் அரசுப் படை தொடர்ந்து ஐஎஸ் பகுதிகளில் முன்னேறி வருகிறது. இருதரப்புக்கும் இடையே கடும் சண்டை நடைபெறுகிறது. இதனால் மோசூல் நகரில் இருந்து சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இதுவரை இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ட்டும் 17 ஆயிரம் பேரும் மார்ச் 3-ம் தேதி 13 ஆயிரம் பேரும் மோசூலை விட்டு வெளியேறினர்.
முக்கிய செய்திகள்
உலகம்
16 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago