அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 10 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சுமார் 1,500-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் கலிபோர்னியாவில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, "கலிபோர்னியாவில் திங்கட்கிழமை முதல் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருகிறது.
இதனால் தெற்கு கலிபோர்னியாவில் சுமார் 4,000 முதல் 5,000 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காட்டுத் தீயின் தாக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அவர்கள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஹெலிகாப்டர்கள் உதவியுடன் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்” என்று கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago