முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடி படுகொலை தொடர்பான ஆயிரக்கணக்கான ரகசிய ஆவணங்களை அமெரிக்க அரசு இணையத்தில் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின்படி இதுகுறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அமெரிக்க தேசிய காப்பகம், டெக்ஸாஸ் மாநிலத்தில் 1963-ல் நவம்பர் 22-ம் தேதி நிகழ்ந்த ஜான் எஃப். கென்னடி படுகொலை குறித்து 2,891 ஆவணங்களை வெளியிட்டுள்ளது.
ஆனால் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள கென்னடி ஆய்வாளர்கள், வெடிகுண்டு குறித்த முழுமையான தகவல்களை ஆவணங்கள் கொண்டிருக்கவில்லை எனவும் இதன்மூலம் படுகொலை குறித்துப் கூறப்பட்ட கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலாது என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய ட்ரம்ப், ''கொலை குறித்த அனைத்து தகவல்களையும் வெளியிட முடியாது. தேசத்தின் பாதுகாப்புக்காகவும், வெளியுறவுத்துறை விவகாரங்களை முன்னிட்டும் நிர்வாகத் துறைகள் மற்றும் நிறுவனங்கள் இந்தக் கோரிக்கையை வைத்தன. அதை ஏற்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை'' என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
11 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago