ரோஹிங்கியா விவகாரம்: மியான்மர் மீது பொருளாதாரத் தடை விதிக்க தயாராகும் அமெரிக்கா?

By ராய்ட்டர்ஸ்

ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மர் அரசு கையாண்ட விதத்தை கருத்தில் கொண்டு அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்கா யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்கா திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "மியான்மரில் ராக்கைன் மாவட்டத்தில் ரோஹிங்கியா முஸ்லிம் சமூகத்தின் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் குறித்து அமெரிக்கா தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தது. இதன் அடுத்த கட்டமாக சிறுபான்மையினராக உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது மியான்மர் அரசு மேற்கொண்ட வன்முறைகள் காரணமாக அமெரிக்கா அந்நாட்டின் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதில் பொருளாதாரத் தடைகளும் இருக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

10 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கிய முஸ்லிம்கள் மியான்மரில் ‘நிறவெறி’ காலக்கட்டத்தில் வாழ்வது போல் வாழ்ந்து வருகின்றனர்.

ரோஹிங்கியா முஸ்லிம்களை வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக வந்தவர்கள் என்று மியான்மர் அரசு கூறிவந்தது.

2012-ம் ஆண்டு ராக்கைனில் பவுத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.

அதன் பிறகு அங்கு தொடர்ந்து பவுத்தர்களுக்கும்,  ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் நடந்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக லட்சக்கணக்கான  ரோஹிங்கியா மக்கள் வங்கதேசத்துக்கு இடம்பெயர்ந்தனர்.

இதுவரை மியான்மரிலிருந்து  வங்கதேசத்துக்கு 5 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கிய மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

19 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்