மியான்மரிலிருந்து வரும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு வங்கதேசம் தொடர்ந்து உதவும் என்று வங்கதேச அதிபர் ஷேக் ஹசினா கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு டாக்கா திரும்பிய வங்க தேசம் அதிபர் ஷேக் ஹசினா ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறித்து இன்று (சனிக்கிழமை) பேசும்போது, "ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு தொடர்ந்து உதவ வங்கதேச அரசு தயாராக உள்ளது. அவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பும்வரை சர்வதேச நிறுவனங்களின் உதவியுடன் தற்காலிகமான முகாம்களை அமைக்கும் திட்டத்தை தொடர்ந்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
10 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கிய முஸ்லிம்கள் மியான்மரில் ‘நிறவெறி’ காலக்கட்டத்தில் வாழ்வது போல் வாழ்ந்து வருகின்றனர்.
ரோஹிங்கியா முஸ்லிம்களை வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக வந்தவர்கள் என்று மியான்மர் அரசு கூறிவந்தது.
2012-ம் ஆண்டு ராக்கைனில் பவுத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.
அதன் பிறகு அங்கு தொடர்ந்து பவுத்தர்களுக்கும், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக லட்சக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் வங்கதேசத்துக்கு இடம்பெயர்ந்தனர்.
இதுவரை மியான்மரிலிருந்து வங்கதேசத்துக்கு 5 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கிய மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்
முக்கிய செய்திகள்
உலகம்
12 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago