எகிப்து பாலைவனத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 30 போலீஸார் பலி

By ராய்ட்டர்ஸ்

எகிப்தின் மேற்கு பாலைவனத்தில் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கித் தாக்குதலில், 30 போலீஸார் பலியாகியுள்ளனர்.

மேலும் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இந்தத் தாக்குதலில் தீவிரவாதிகள் தரப்பிலும் சிலர் பலியானதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

எகிப்து தலைநகரில் உள்ள நீதிபதிகளையும், காவல்துறை அதிகாரிகளையும் குறிவைத்துத் தாக்குதல் நடத்தும் கும்பல் பாலைவனத்தில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த தாக்குதல் நடைபெற்றது.

தாக்குதலில் 4 காவலர்களும், 4 தீவிரவாதிகளும் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியக் கிளர்ச்சியைத் தொடர்ந்து சந்தித்து வரும் நாடு எகிப்து. இதனால் அங்கு சினாய் தீபகற்பத்தின் வழியாக தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதல்களால் 2013-ல் இருந்து நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் படையினர் பலியாகியுள்ளனர்.

எனினும் இஸ்லாமிய தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றனர். தற்போது கெய்ரோவில் உள்ள தேவாலயங்கள் அவர்களின் முக்கிய இலக்காக உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

20 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்