போட்டித்தேர்வு தொடர் 32: பொருளாதாரமும், பொதுத்துறை நிறுவனங்களும்!

By செய்திப்பிரிவு

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் பகுதி. - 32 -

இந்தியாவில் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (Central Public Sector Enterprises - CPSEs) என பிரபலமாக அறியப்படுகிற அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள், வணிகத் திறன் மற்றும் சமூகப் பொறுப்பு என்ற இரட்டை நோக்கத்தை கொண்டுள்ளன.

ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், விநியோகஸ்தர்கள், கடன் வழங்குவோர், சமூகம் என அனைத்து பங்குதாரர்களின் நலன்களையும் இந்த நிறுவனங்கள் பாதுகாக்க வேண்டும்.

நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு, ஒருசில பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. இதில்ரயில்வே, தபால் - தந்தி, துறைமுகஅறக்கட்டளைகள், ஆயுத தொழிற்சாலைகள், அரசு உப்பு தொழிற்சாலைகள் போன்ற சில நிறுவனங்கள் துறை ரீதியாக நிர்வகிக்கப்பட்டன.

சுதந்திரம் பெற்றதில் இருந்து, தொழில் துறை, பொருளாதார வளர்ச்சியில் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தனித்துவமான பங்கை ஆற்றி வருகின்றன. வேலையின்மை, கிராமப்புற - நகர்ப்புற வேறுபாடு, பிராந்திய, வர்க்க வேறுபாடுகள், தொழில்நுட்பத்தில் பின்தங்கியது போன்ற பிரச்சினைகளை ஒழிக்கவும், பொதுத்துறையை தன்னிறைவான பொருளாதார வளர்ச்சிக்கான கருவியாக மேம்படுத்தவும் CPSE-களின் இலக்குகள் அமைக்கப்பட்டன.

1951-ல் 5 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. 1969-ல் இது 84 ஆக உயர்ந்தது. 2011-12 நிதி ஆண்டில் 260 என்றும், 2016-17 நிதி ஆண்டில் 331 என்றும் இருந்த பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கை 2019-20 நிதி ஆண்டில் 366 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 2016-17 நிதி ஆண்டில் 50 ஆக இருந்தது. இது 2019-20 நிதி ஆண்டில் 58 ஆக அதிகரித்துள்ளது.

நிறுவனத்தின் அளவு, செயல்திறன், லாபம் ஆகியவற்றை பொருத்து CPSE-களின் வாரியங்களுக்கு பல்வேறு அளவு நிதி அதிகாரங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.

மஹாரத்னா, நவரத்னா, மினிரத்னா

அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் 10 மஹாரத்னா, 14 நவரத்னா, 61 மினிரத்னா வகை I மற்றும் 12 மினிரத்னா வகை II (மார்ச் 31, 2020 நிலவரப்படி) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுத்துறை நிறுவனங்கள் முதன்மையாக பொருளாதார வளர்ச்சி, வணிகச் சிறப்பு, பிராந்திய மேம்பாடு மற்றும் சமூகக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக அமைக்கப்பட்டன. பொருளாதாரத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை.

மேலும் அவை பரந்த அளவிலான தயாரிப்புகள், சேவைகளை வழங்குகின்றன. எஃகு, கனரக இயந்திரங்கள், இயந்திரக் கருவிகள், கருவிகள், கனரக இயந்திர கட்டுமான உபகரணங்கள், வெப்ப மற்றும் ஹைடல் நிலையங்களுக்கான கனரக மின் உபகரணங்கள், போக்குவரத்து உபகரணங்கள், தொலைதொடர்பு கருவிகள், கப்பல்கள், நீர்மூழ்கிகள், உரம், மருந்து, பெட்ரோ கெமிக்கல்ஸ், சிமென்ட், ஜவுளி, செய்தித் தாள், காகிதம், உப்பு, மருத்துவ உதவிகள், நிலக்கரி, கனிமங்கள் சுரங்கம், கச்சா எண்ணெய் பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரிப்பு, விமானம்/ கடல்/ நதி/ சாலை போக்குவரத்து, தேசிய மற்றும் சர்வதேச வர்த்தகம், ஆலோசனை, ஒப்பந்தம் போன்ற சில நுகர்வோர் சேவைகள், கட்டுமான சேவைகள், உள்நாட்டு, வெளிநாட்டு தொலைதொடர்பு சேவைகள், மின் உற்பத்தி, பரிமாற்றம், நிதி சேவைகள், ஓட்டல், சுற்றுலா சேவைகள் உள்ளிட்ட துறைகளில் பொதுத்துறை நிறுவனங்கள் பங்களிக்கின்றன.

நாட்டின் பொருளாதார உற்பத்திக்கு நேரடி பங்களிப்பு தவிர, CPSE-கள் வழங்கும் தயாரிப்புகள், சேவைகளின் வரம்பு குறிப்பிடத்தக்க கீழ்நிலை தாக்கத்தை உருவாக்க உதவுகிறது. இந்த தாக்கம் Medium, Small and Micro Enterprises வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குதல், நேரடி/ மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்குதல், அரசாங்கத்தின் மூலோபாய நிகழ்ச்சி நிரலை இயக்குதல், அரசாங்க வருமானத்துக்கு பங்களிப்பு செய்தல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் புதுமைகளை உந்துதல் போன்ற வடிவங்களில் இருக்கலாம்.

விவசாயத் துறையின் போக்கு

வேலைவாய்ப்பு, வருமானம், தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வதில் விவசாயம் மற்றும் அதுதொடர்பான துறைகள் இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தேசிய கணக்கு புள்ளிவிவரங்கள் 2021-ன்படி, விவசாயத் துறையின் தற்போதைய விலையில் தேசிய Gross Value Addition (GVA) 2019-20 நிதி ஆண்டில் ரூ.33.9 லட்சம் கோடியாக இருந்தது.

இது ஒட்டுமொத்த தேசிய ஜிவிஏவில் 18.4% ஆகும். 2019-20 நிதி ஆண்டில் முந்தைய ஆண்டைவிட விவசாயத் துறையின் தேசிய Gross Value Addition 12.5% ​​வளர்ச்சி பெற்றது.

2019-20 நிதி ஆண்டில் CPSE-களின் மொத்த தொகை ரூ.82 கோடிஅதிகரித்துள்ளது, முந்தைய ஆண்டைவிட இது 8.8% வளர்ச்சி ஆகும். இதில் நிதி முதலீடுகளும் ரூ.38.3 கோடி அதிகரித்துள்ளது. இது நீண்டகால கடன்களின் அதிகரிப்பால் உந்தப்பட்டது. இருப்பினும், 2019-20 நிதி ஆண்டில் மதிப்பு கூட்டல், மொத்த வருவாய் போன்ற அளவுருக்கள் முறையே 5.9% மற்றும் 2.2% மிதமான சரிவை பதிவு செய்தன.

(அடுத்த பகுதிசனிக்கிழமை வரும்)

முந்தைய பகுதி: போட்டித்தேர்வு தொடர் 31: டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வுக்கு தயாரா?

போட்டித் தேர்வு தொடர்பான ஆலோசனைகளையும், உங்கள் சந்தேகங்கள், கேள்விகளுக்கான பதில்களையும் பெற, https://www.htamil.org/00532 லிங்க்-ல் பதிவுசெய்து கொள்ளவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

19 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்