போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் பகுதி. - 28 -
மக்களவை (Loksabha - Houseof People): இந்திய அரசியலமைப்பின்படி மக்களவையில் அதிகபட்சமாக 552 உறுப்பினர்கள் இருக்கலாம். 28 மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்த 530 உறுப்பினர்கள், யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்த 20 உறுப்பினர்கள், ஆங்கிலோ இந்தியன் சமூகத்துக்கு 2 உறுப்பினர்கள்.
அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை உறுப்பினர்கள் எழுப்புவதற்கான முக்கியமான நாடாளுமன்ற சாதனங்களில் ஒன்று ‘Motions’ (பிரேரணைகள்).
‘Resolution’ (தீர்மானம்) என்பதுபொதுமக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் சபையின் விருப்பத்தை உறுதி செய்வதற்கான மற்றொரு நடைமுறை சாதனமாகும்.
மக்கள் நலன் சார்ந்த ஒரு விஷயத்தில் விவாதத்தை சபையில் எழுப்புவதற்கான நடைமுறை சாதனங்களில் ஒன்றே Resolution (தீர்மானம்). விதிகளுக்கு உட்பட்டு, உறுப்பினர் அல்லது அமைச்சர் முன்வைக்கலாம்.
சட்டரீதியான விளைவைக் கொண்ட தீர்மானங்களை வழங்கும் அரசியலமைப்பில் உள்ள பட்டியல்:
அவசர சட்டம்: குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் (இந்திய அரசியலமைப்பு விதி 123) பிரகடனப்படுத்தப்பட்ட ஓர் அவசர சட்டம், நாடாளுமன்ற சட்டத்தின் அதே சக்தியையும், விளைவையும் கொண்டிருக்கும். நாடாளுமன்றம் கூடிய பிறகு, இரு அவைகளிலும் முன்வைக்கப்பட்டு, நாடாளுமன்றம் மீண்டும் கூடியதில் இருந்து 6 வாரங்கள் முடிவடையும் முன்பு நிறைவேற்றப்படவேண்டும்
மாநில சட்ட மேலவை, சட்டப்பேரவைகளை கலைத்தல் அல்லது உருவாக்குதல் (Abolition or creation of Legislative Councils in States). இதற்கு, பேரவையின் மொத்த உறுப்பினர்களின் பெரும்பான்மை மற்றும்சட்டப்பேரவை உறுப்பினர்களில் 3-ல்2 பங்கு உறுப்பினர்கள் பெரும்பான்மையுடன் கலந்துகொண்டு வாக்களிப்பார்கள்.
குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறை (Impeachment of President): அத்தகைய விருப்பத்துக்கான முன்மொழிவு, குறைந்தபட்சம் 14 நாள்முன்னறிவிப்புக்கு பிறகு, சபையின் மொத்த உறுப்பினர்களில் நான்கில்ஒரு பங்குக்கு குறையாமல் எழுத்துப்பூர்வமாக கையொப்பமிடப்பட்டு, தீர்மானத்தை முன்வைப்பதற்கான விருப்பத்தை இந்திய அரசியலமைப்பு விதி 61(2) வழங்கியுள்ளது.
அத்தகைய தீர்மானம் சபையின் மொத்த உறுப்பினர்களில் 3-ல் 2 பங்குக்கு குறையாத பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட வேண்டும். சபையின் மொத்த உறுப்பினர்களில் 3-ல் 2 பங்குக்கு குறையாத பெரும்பான்மையுடன் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அந்த குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்ட அல்லது விசாரிக்கப்படுவதற்கு காரணமானால், குடியரசுத் தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டு நீடித்ததாக அறிவிக்கப்படும்.
# புதிய அகில இந்திய சேவை உருவாக்கம் (Creation of New AllIndia Service): இந்திய அரசியலமைப்பு விதி 312-ன்படி, 3-ல் 2 பங்குஉறுப்பினர்களால் ஆதரிக்கப்படும் தீர்மானம் மூலம் மாநில கவுன்சில் (Rajya Sabha) அறிவித்து, தேசிய நலனுக்காக அது அவசியம் அல்லதுபொருத்தமானது என்று வாக்களித்தால், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அனைத்தையும் உருவாக்குவதற்கு நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம், இந்திய சேவைகள் (அனைத்திந்திய நீதித்துறை சேவை உட்பட) யூனியன் மற்றும் மாநிலங்களுக்கு பொதுவான புதிய அகில இந்திய சேவையை உருவாக்கலாம்.
# அவசரநிலை பிரகடனம் (Proclamation of Emergency): அரசியலமைப்பு விதி 352-ன்படி, போர் அல்லது வெளிநாட்டு ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியால் இந்தியாவின் அல்லது அதன் பிரதேசத்தின் ஏதேனும் ஒரு பகுதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் கடுமையான அவசரநிலை நிலவுவதாக குடியரசுத் தலைவர் கருதினால், பிரகடனம் மூலம் அதற்கான அறிவிப்பை வெளியிடலாம்.
# குடியரசுத் தலைவர் ஆட்சி: அரசியலமைப்பு சட்டத்தின்படி, மாநிலங்கள் செயல்படத் தவறினால், அரசியலமைப்பு விதி 356-ன்படி, குடியரசுத் தலைவர் ஒரு மாநில ஆளுநரிடம் இருந்து அறிக்கையைப் பெற்றோ அல்லது வேறு வகையிலோ, அரசியலமைப்பு விதிகளின்படி மாநிலஅரசாங்கத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கருதினால், பிரகடனம் மூலம் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம்.
# நிதி அவசரநிலை பிரகடனம் (Financial Emergency): நாட்டின் அல்லது ஏதேனும் ஒரு பகுதியின் நிதி நிலைத்தன்மை கடன் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் கருதினால், அரசியலமைப்பு விதி 360-ன்படி, பிரகடனம் மூலம் அதற்கான அறிவிப்பை வெளியிடலாம்
# அரசியலமைப்பு சட்டத் திருத்தம் (Constitutional Amendment): அரசியலமைப்பு விதி 368-ன்படி, இது அரசியலமைப்பு மற்றும் நடைமுறையை திருத்துவதற்கான நாடாளுமன்றத்தின் அதிகாரம் ஆகும்.
ஒவ்வொரு அவையிலும் சபையின் மொத்த உறுப்பினர்களின் பெரும்பான்மை மற்றும் குறைவான பெரும்பான்மையால் அந்த மசோதா நிறைவேற்றப்படும் சூழலில், அந்த சபை உறுப்பினர்களில் 3-ல் 2 பங்கினர் கலந்துகொண்டு வாக்களித்தால், குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும்,அவர் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த பிறகு, அரசியலமைப்பு மசோதாவின் விதிமுறைகளின்படி திருத்தப்படும்.
(அடுத்த பகுதிசனிக்கிழமை வரும்)
முந்தைய பகுதி: போட்டித்தேர்வு தொடர் 27: நாடாளுமன்ற சொற்களஞ்சியம்
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago