போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் பகுதி. - 27-
நாடாளுமன்றம் தொடர்பான சில பிரத்யேக சொற்களை இங்கு காணலாம்.
சட்டம் (Act) - நாடாளுமன்றத்தின்இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மசோதா (Bill) - சரியான வடிவிலான பேரவை முன்மொழிவின் வரைவு. நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்டு சட்டமாகிறது.
கவன ஈர்ப்பு (Calling Attention) - அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்துக்கு அமைச்சரின் கவனத்தை ஒரு உறுப்பினர் அழைப்பதற்கான செயல்முறை.
மானியக் கோரிக்கை (Demandfor Grants) - திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பட்ஜெட் ஒதுக்கீட்டை ஒதுக்கீடு செய்தல், அமைச்சகம்/ துறையின் திட்டமில்லாத செலவுகள்.
‘குவாரம்’ (Quorum) - ஒரு அமர்வில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை. அரசியலமைப்பின் 100(3) பிரிவின் கீழ்வழங்கப்பட்ட மக்களவை அல்லது மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் பத்தில் ஒரு பங்காகும்.
குறுகியகால விவாதம் (Short Duration Discussion) - இது அவசரபொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தை எழுப்புவதற்கான நாடாளுமன்ற நடைமுறை. இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் ஓர் அறிவிப்பை வழங்க வேண்டும்; 2 உறுப்பினர்கள் அதற்கு ஆதரவளிக்க வேண்டும். விவாதத்தின்போது விஷயம் தெளிவாக, துல்லியமாக இருக்க வேண்டும்.
Unstarred and Starred Questions: நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் வாய்மொழியாக பதில் அளித்தால் அது நட்சத்திரக் கேள்வி. எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கப்பட்டால் நட்சத்திரமிடப்படாத கேள்வி.
நாடாளுமன்றக் குழுக்கள்
நாடாளுமன்றக் குழுக்களை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்:
(அ) 3 நிதிக் குழுக்கள்
(ஆ) 24 துறை சார் நிலைக்குழுக்கள்
(இ) இதர நிலைக்குழுக்கள்
(ஈ) தற்காலிக குழுக்கள்
நிதிக் குழுக்கள்
1. மதிப்பீடுகளுக்கான குழு (Estimates Committee) - 30 உறுப்பினர்கள் (குறிப்பாக, மக்களவை எம்.பி.க்கள்). மானியங்களுக்கான தேவைக்கான அனைத்து மதிப்பீடுகளும் சரியாக செய்யப்படுவதை இக்குழு உறுதிசெய்து, மானியங்களுக்கான கோரிக்கைகள் அதிகமாக இருந்தால் அதை குறைக்கிறது
2. பொதுக் கணக்கு குழு (Public Accounts committee) - 22 உறுப்பினர்கள். இக்குழு கணக்கு அறிக்கையை ஆராய்ந்து, நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் பணம், உரியநோக்கத்துக்காக செலவிடப்படுகிறதா, இல்லையா என்பதை ஆய்வுசெய்கிறது. இக்குழுவில் எந்த அமைச்சரும் உறுப்பினர் ஆகமுடியாது.
இதன்தலைவர் மக்களவை எதிர்க்கட்சியை சேர்ந்தவர். பப்ளிக் அக்கவுன்ட்ஸ் கமிட்டி (PAC) 100 ஆண்டு நிறைவு செய்திருக்கிறது. நாடாளுமன்ற வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனை.நமது நாடாளுமன்ற குழுக்களில், இது மிகப் பழமையானது.
3. பொது நிறுவனங்களுக்கான குழு (Public Sector Undertaking) - 22 உறுப்பினர்கள். இக்குழு அனைத்து மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் நிதி மற்றும் நிர்வாக செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும்.
துறை சார்ந்த நிலைக்குழுக்கள் (DRSCs): துறை சார்ந்த 24 நிலைக்குழுக்கள் உள்ளன. மத்திய அரசின்அனைத்து அமைச்சகங்கள்/ துறைகளின் கீழ் செயல்படும் இக்குழுக்கள் ஒவ்வொன்றும் 31 உறுப்பினர்களை கொண்டுள்ளது. மக்களவையில் இருந்து 21 பேர், மாநிலங்களவையில் இருந்து 10 பேர். இக்குழுக்களின் பதவிக் காலம் ஓராண்டு.
மாநிலங்களவை (ராஜ்யசபா)
ராஜ்யசபா என்று அழைக்கப்படும் ‘மாநிலங்களின் கவுன்சில்’ 1954 ஆக.23-ம் தேதி அறிவிக்கப்பட்டது. 1918-ம் ஆண்டின் மான்டேக் செம்ஸ்ஃபோர்டு அறிக்கையில் இதற்கான அறிவிப்பு வெளியானது. இந்திய அரசு சட்டம் (Government of India Act), 1919 கட்டுப்படுத்தப்பட்ட உரிமையுடன் அப்போதைய சட்டமன்றத்தின் 2-வது அவையாக ‘மாநிலகவுன்சில்’ உருவாக்கம். 1921-ல் நடைமுறைக்கு வந்தது. 1946 டிச.9-ம்தேதி முதன்முதலில் மத்திய சட்டமன்றமாகவும் (Constituent Assembly) செயல்பட்டது. 1950 முதல் 1952வரை ‘தற்காலிக நாடாளுமன்றமாக’ இயங்கியது.
மாநிலங்களவை உறுப்பினர்கள்
இந்திய அரசியலமைப்பு பிரிவு 80,மாநிலங்களவையின் அதிகபட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கை 250 எனகுறிப்பிடுகிறது. தற்போதைய உறுப்பினர்கள் 245 பேர். இதில் 28 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் இருந்து 233 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். குடியரசுத் தலைவரால் 12 பேர் பரிந்துரை செய்யப்படுகின்றனர்.
Allocation of Seats: மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இடங்களை ஒதுக்குவது குறித்து அரசியலமைப்பின் 4-வது அட்டவணையில் கூறப்பட்டுள்ளது. மாநில மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழகத்துக்கு மொத்தம் 18 மாநிலங்களவை இடங்கள். திரையிசை துறையில் சாதனை படைத்த இசையமைப்பாளர் இளையராஜா, இந்திய தடகளத்தின் அடையாளமாக விளங்கும் பி.டி.உஷா ஆகியோர் மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
(அடுத்த பகுதி நாளை வரும்)
முந்தைய பகுதி: போட்டித்தேர்வு தொடர் 26: இந்தியாவின் விண்வெளி மேம்பாடு
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago